‘தீ நகர்’ படம் மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமான திருமலை தொடர்ந்து ‘அகம் புறம்’, ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தற்போது தனது டி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ‘மான் வேட்டை’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார்.
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நேற்று காலை நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், “இயக்குநர் திருமலை அனைவருக்கும் உதவ கூடிய நல்ல உள்ளம் கொண்ட நபர். இந்தப் படத்தை சிறப்பான முறையில் எடுத்து முடித்து இருக்கிறார்கள். மான்வேட்டை படத்தை கடின உழைப்பையும், அர்பணிப்பையும் அளித்து உருவாக்கி இருக்கின்றனர். இந்த படம் வசூல்வேட்டை காண வேண்டும். இந்த படம் வெற்றி பெற்றால் பல சிறிய தயாரிப்பாளர்கள் வருவார்கள். இந்த படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.” என்றார்.
பா.ஜ.க பிரமுகர் கரு.நாகராஜன் பேசுகையில், “திருமலை மிக தைரியமானவர், அனைத்திற்கும் குரல் கொடுக்க கூடியவர். திரைப்படத்தை வாழ வைக்க கூடியவர்கள் திரைப்பட தயாரிப்பாளர்கள் தான். திரைப்படங்களை வெளியிடுவதில் இருக்கும் சிக்கல்களை அமைப்பாய் இணைந்து அவர்கள் தீர்க்க வேண்டும். இந்த படம் வெற்றி பெற எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.
தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் பேசுகையில், “ஒரு படத்தின் ஆடியோ வெற்றி பெற்றாலே அதை வைத்து படத்திற்கு மிகப்பெரிய வருவாய் ஈட்டலாம். இதை இந்த படம் சிறப்பாக செய்துள்ளது. நல்ல படங்கள் எப்பொழுதும் வெற்றி பெறும். அதற்கு பக்கத்தில் இருக்கும் மலையாள, கன்னட மொழி படங்கள் மிகப்பெரிய உதாரணம். இந்த மான் வேட்டை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்.” என்றார்.
தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேசுகையில், “படங்களில் சின்ன படம் பெரிய படம் என்று ஒன்னும் இல்லை. படம் வெளியான பிறகு தான் அது முடிவாகும். படத்தின் தலைப்பு சிறப்பாக இருக்கிறது, சிறந்த படத்தை உருவாக்கியிருப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்.” என்றார்.
அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசுகையில், “எல்லா விஷயங்களும் தோள் கொடுப்பவர் திருமலை. அவர் எடுக்கும் படங்கள் எல்லாம் வெற்றி பெற வேண்டும். இந்த படம் சிறப்பாக உருவாகி இருகிறது. இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் சிறப்பாக எடுக்கபட்டு இருக்கிறது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.” என்றார்.
நடிகர் ரவி மரியா பேசுகையில், “நண்பர் திருமலைக்காக மட்டுமே இந்த விழாவிற்காக வந்தேன். இந்த படம் வெற்றி பட வரிசையில் இணைய வேண்டும். திருமலை எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்க கூடிய நல்ல மனிதர். நல்ல படம் எப்பொழுதும் வெற்றி பெறும். சிறந்த படங்களுக்கு மக்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள். அந்த வரிசையில் இந்த மான்வேட்டை படம் மிகப்பெரிய வெற்றியடையும்.” என்றார்.
நடிகர் ரமேஷ் கண்ணா பேசுகையில், “இந்த படத்தின் டைட்டிலே அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது. படத்தின் ஹீரோ சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா சிறப்பான இசையை கொடுத்துள்ளார். படம் எதிர்ப்பார்பை அதிகரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.” என்றார்.
நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், “எனது நண்பன் தான் இந்த படத்தின் கதாநாயகன், அவன் ஒரு கடின உழைப்பாளி, அவன் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும். இந்த மான்வேட்டை அந்த வெற்றியை கொடுக்கும் என்று நம்புகிறேன். திருமலை சினிமாவிற்காக உழைப்பவர். இதில் நடித்து இருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை.” என்றார்.
அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய், விரைவில் அரசியல் பணிகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு தனது படத்தின் பணிகளில் தீவிரம் காட்ட உள்ளார்...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...
‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘முரா’...