Latest News :

உதயநிதி ஸ்டாலின் அரசியலில் இன்னும் பல உயரங்களை தொடுவார் - நடிகர் துரை சுதாகர் வாழ்த்து
Thursday December-15 2022

நடிகரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளரான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்று சினிமாவில் பன்முக திறன் கொண்டவராக வலம் வந்து பல வெற்றிகளை குவித்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த உதயநிதி ஸ்டாலின், இளம் வயதில் தனது கடுமையான உழைப்பினால் அரசியலிலும் தனக்கென்று தனி பாதை வகுத்துக்கொண்டு பல வெற்றிகளை குவித்து வருகிறார்.

 

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டதோடு, தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு திமுக ஆட்சி அமைக்க அயராத உழைத்தவரின் கட்சிப் பணியை பார்த்து தொண்டர்கள் வியந்ததோடு, அவர் மீது பெரும் நம்பிக்கையும் கொண்டனர்.

 

அந்த நம்பிக்கையின் பலனாக கட்சி மேலிடம் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், தனது துறையில் வழக்கம் போல பல்வேறு அதிரடி பணிகளை மேற்கொண்டு மக்களின் உள்ளங்களில் இடம் பிடிப்பதோடு, அரசியலில் இன்னும் பல உயரங்களை தொடுவார், என்று கூறி வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

Durai Sudhakar in Pattathu Arasan

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில், ஏ.சற்குணம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பட்டத்து அரசன்’ படத்தில் ராஜ்கிரணின் இளையமகன் வேடத்தில் நடித்து பாராட்டு பெற்ற நடிகர் துரை சுதாகர், தற்போது சசிகுமாரின் ‘நந்தன்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8722

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery