’கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கும் மூன்றாவது படம் ‘நந்தன்’. இதில் நாயகனாக சசிகுமார் நடிக்க, அவருக்கு ஜோடியாக சுருதி பெரியசாமி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குநர் பாலாஜி சக்திவேல், துரை சுதாகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டார். சசிகுமார் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தோடு வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி சமூக வலைதளங்களில் டிரெண்டானது.
இந்த நிலையில், நாயகன் சசிகுமார், படத்தின் இயக்குநர் இரா.சரவணன் மற்றும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் துரை சுதாகர் ஆகியோர் ஐயப்பனுக்கு விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வந்துள்ளனர்.
முதல் முறையாக மாலை போட்டு சபரிமலை சென்று வந்திருக்கும் நடிகர் சசிகுமார், கடந்த சில நாட்களாக விரதம் இருந்தவாரே ‘நந்தன்’ படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார். பிறகு மதுரையில் உள்ள ஐய்யப்பன் கோவிலில் சக ஐய்யப்ப பக்தர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாக இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை புறப்பட்டு சென்றார்.
சசிகுமாருடன் இயக்குநர் இரா.சரவணன், நடிகர் துரை சுதாகர் என ‘நந்தன்’ படக்குழு சபரிமலைக்கு சென்று வந்திருக்கிறார்கள். சசிகுமாரைப் போல் இயக்குநர் இரா.சரவணன், நடிகர் துரை சுதாகர் ஆகியோரும் முதல் முறையாக சபரிமலைக்கு சென்றுள்ளனர்.
ஏற்கனவே பர்ஸ்ட் லுக் போஸ்டரால் டிரெண்டிங்கான ‘நந்தன்’ தற்போது படக்குழுவினரின் சபரிமலை பயணத்தாலும் வைரலாகி வருகிறது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...