’ஈரம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அறிவழகன், தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். அப்படத்தை தொடர்ந்து ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’, ‘குற்றம் 23’ ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இணைய்த் தொடரையும் இயக்கினார்.
அருண் விஜயை வைத்து அறிவழகன் இயக்கியிருக்கும் ‘பார்டர்’ விரைவில் வெளியாக உள்ள நிலையில், அவர் தனது புதிய படத்தை அறிவித்துள்ளார். இந்த முறை இயக்குநராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் அறிவழகன் களம் இறங்குகிறார்.
ஆல்பா பிரேம்ஸ் என்ற நிறுவனம் மூலம் 7ஜி பிலிம்ஸ் சிவாவுடன் இணைந்து அறிவழகன் தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘சப்தம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆதி நாயகனாக நடிக்கிறார்.
திரில்லர் படங்களை தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார்.
ஈரம் படம் மூலம் மாபெரும் வெற்றியை தந்த அறிவழகன், ஆதி வெற்றிக் கூட்டணி இப்புதிய படத்தில் இணைகிறது. ஈரம் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், ரசிகர்களை உறைய வைக்கும் திகில் திரில்லராக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் தமன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் சமீபத்தில் நடைபெற்றது. பத்தில் பணியாற்ற உள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...