பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தேசியதலைவர்’ படத்தில் முத்துராமலிங்க தேவர் கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஜே.எம்.பஷீர். இப்படத்தை பிரபல இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ‘தேசியதலைவர்’ படத்தின் நாயகன் ஜெ.எம்.பஷீரும், இயக்குநர் ஆர்.அரவிந்தராஜும் ஹாலிவுட் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளனர்.
ஹாலிவுட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனமான பிங்க் ஜாகுவார் எண்டர்டெயின்மெண்ட் புதிய ஹாலிவுட் படம் ஒன்றை தயாரிக்க உள்ளது. இப்படத்தை இயக்க ஆர்.அரவிந்தராஜ் ஒப்பந்தமாகியிருப்பதோடு, இதில் நாயகனாக நடிக்க ஜெ.எம்.பஷீர் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிறுவனத்தின் தலைவர் ஹிஸ் ஹைன்ஸ் பிரின்ஸ் ஜெகதீஷ், மேடம் ஸ்வர்ணா ஆகியோர் விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.
மேலும், ‘தேசியதலைவர்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு ஹாலிவுட் படத்தின் பணிகள் மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...