Latest News :

சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகும் காதல் கதை ‘1982 அன்பரசின் காதல்’
Saturday December-24 2022

தேவகன்யா புரொடக்சன்ஸ் சார்பில் பிஜு கரிம்பின் கலை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உல்லாஷ் சங்கர் இயக்கியிருக்கும் படம் ‘1982 அன்பரசின் காதல்’. இதில் ஆஷிக் மெர்லின், சந்தனா அரவிந்த், அமல் ரவீந்திரன், அருணிமா, ஹரீஷ்  சிவப்பிரகாசம், செல்வா ஆகியோருடன் இயக்குநர் உல்லாஷ் சங்கரும் நடித்துள்ளார். 

 

இப்படம் குறித்து கூறிய இயக்குநர் உல்லாஷ் சங்கர், “கதையின் நாயகனான அன்பரசு ஒரு பெண்ணை மூன்று வருடமாய் காதலிக்கிறான்.  அந்த பெண்ணிடம் பல முறை காதலை வெளிப்படுத்த முயலுகிறான். அவனால் வெளிப்படுத்த இயலவில்லை. இதை அறிந்த நண்பர்கள் அன்பரசை கிண்டலும், கேலியும் செய்கின்றனர்.  மனம் தளராத அன்பரசு காதலி இருக்கும்  கேரளாவிற்கு  சென்று அவளிடம் காதலை கூற   முற்படுதையில் அந்த திடுக்கிடும் சம்பவம் நடைபெறுகிறது. அதிர்ச்சியின் உச்சத்திற்கு செல்லும் அன்பரசு  அவளிடம் தன் காதலை சொன்னானா ? என்பதை கதைக்களமாக்கி, பரபரப்பான திரைக்கதை அமைத்து எனது முதல் படமாக இயக்கியிருக்கிறேன்.” என்றார்.

 

1982 Anbarasin Kadhal

 

ஜிஸ்பின் செபாஸ்டியன் ஒளிப்பதிவையும், கிரேசன் படத்தொகுப்பையும், எஸ். சிந்தாமணி இசையையும், சிபு கிருஷ்ணா கலையையும், டின்ஸ் ஜேம்ஸ் சண்டைப் பயிற்சியையும், நிதின் கே. உதயன் புகைப்படங்களையும், ராயீஸ் சுல்தான் நடன பயிற்சியையும், விஜயமுரளி மக்கள் தொடர்பையும் அனுமோட் சிவராம், பென்னி இருவரும் பின்னணி இசையையும் கவனித்துள்ளனர்.

 

தேனி, கம்பம், போடிநாயக்கனூர், மூணார் மற்றும் கேரளாவில் உள்ள அழகிய இடங்களில் வளர்ந்துள்ள இப்படத்தின் இணைத்தயாரிப்பை ஷைனி அலியாஸ் கவனிக்கிறார்.

 

படத்தின் துவக்கம் முதல் உச்சகட்ட காட்சி வரை திரில், மர்மம், ஆக்சன், காமெடி, மற்றும் இசைக்கு முக்கியத்துவம் தரும்படமாக  அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வண்ணம் உல்லாஷ் சங்கர் இயக்கியுள்ள இப்படம் விரைவில் திரையாரங்குகளில் வெளியாக உள்ளது.

 

1982 Anbarasin Kadhal

 

இந்த நிலையில், ‘1982 அன்பரசின் காதல்’ படத்தி இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் விஜயமுரளி, செளந்தரராஜன், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், பாடலாசிரியர் சொற்கோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட பாடல்களை பார்த்து சிறப்பு விருந்தினர்கள் பாராட்டியதோடு, படம் நிச்சயம அனைத்து தரப்பினரையும் கவரும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்கள். மேலும், சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது, அதிலும் காதல் கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றால் நிச்சயம் வெற்றி தான், என்றும் கூறினார்கள்.

 

Related News

8738

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery