Latest News :

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘மார்கழியில் மக்களிசை’! - நாளை சென்னையில் துவங்குகிறது
Tuesday December-27 2022

திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான பா.இரஞ்சித், தனது நீலம் பண்பாட்டு மையம் அமைப்பு மூலம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ‘மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். 

 

கடந்த இரண்டு வருடங்களாக சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள், 100-க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் 15000-த்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் என மிக பிரமாண்டமாக நடைபெற்ற ‘மார்கழியில் மக்களிசை’ மக்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

 

இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி நாளை (டிசம்பர் 28) சென்னையில் துவங்குகிறது. சென்னை சேத்துப்பட்டில் உள்ள சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் கான்சர்ட் ஹாலில் பறையிசை மேள தாளங்களுடன் துவக்க விழா நடைபெற உள்ளது.

 

நிகழ்ச்சியின் முதல் நாளான 28 ஆம் தேதி  நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் பாடல்கள் மேடையில் அரங்கேற்றப்படுகின்றது.

 

இரண்டாவது நாளான  29 ஆம் தேதி கறுப்பின மக்களின் புரட்சி வடிவமாக திகழும்  ஹிப் ஹாப் இசையும், சென்னையின் கருவூலமான  கானாப் பாடல்களும்  இடம்பெற உள்ளது. 

 

மேலும் நிகழ்ச்சியின் கடைசி நாளான  30 ஆம் தேதி  நம் மக்களின் பழம்பெரும் கதையாடல்களான  ஒப்பாரி பாடல்கள், விடுதலைக்கான எழுச்சிமிகு  பாடல்கள்  மேடையேற்றப்படுகின்றது. 

 

திரை பிரபலங்கள்  மற்றும்  அரசியல் சார்ந்த சமூக அமைப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக  கலந்து கொண்டு மக்களிசையை மக்களோடு கொண்டாட தயாராக இருக்கிறார்கள்.

 

நிகழ்ச்சிகளை காண கட்டணம் இல்லை.

 

மேலும் கீழே உள்ள டவுன் ஸ்க்ரிப்ட் என்ற வலைதள அமைப்பின் லிங்க் யை கிளிக் செய்வதன்  மூலம் "கட்டணமில்லா" முன்பதிவை பெறுவது மற்றும் நிகழ்ச்சிக்கான முழு விபரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.

 

நாள் 01- நாட்டுப்புற பாடல்கள் & பழங்குடியினர் இசைகள் 

townscript.com/e/margazhiyil-…

 

நாள் 02- கானா & ஹிப்- ஹாப்

townscript.com/e/margazhiyil-…

 

நாள் 03 - ஒப்பாரி & விடுதலை பாடல்கள் townscript.com/e/margazhiyil-…

Related News

8743

”’பெருசு’ உங்களை முகம் சுழிக்க வைக்காது” - இயக்குநர் இளங்கோ ராம் உறுதி
Monday March-10 2025

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’...

”நானும் தயாராகத்தான் இருக்கிறேன், வாருங்கள்...” - நடிகை ரம்பாவுக்கு அழைப்பு விடுத்த கே.பாக்யராஜ்
Monday March-10 2025

அறிமுக இயக்குநர் பாண்டி இயக்கத்தில், பெண் பத்திரிகையாளர் கவிதா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராபர்’...

’மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜைக்காக ரூ.1 கோடி செலவில் போடப்பட்ட கோவில் அரங்கம்!
Thursday March-06 2025

இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...

Recent Gallery