திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் விவாகரத்தும், மறுமணங்களும் தொடர் கதையாக வருவதோடு, சோசியல் மீடியாவில் டிரெண்டாகியும் வருகிறது. நடிகைகள் வனிதா, சமந்தா, அமலா பால் ஆகியோரது விவகரத்துக்கள் இதற்கு சான்றாகும். அதே போல், நடிகை நயன்தாராவின் திருமணம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சோசியல் மீடியாவில் டிரெண்டானது.
இப்படி, சினிமா பிரபலங்களின் திருமணம் மற்றும் விவாகரத்து சம்பவங்கள் அதிகம் கவனம் பெறும் நிலையில், பிரபல நடிகை தனது மூன்றாவது திருமணத்தை அறிவித்துள்ளதும், அவரை திருமணம் செய்ய இருக்கும் நடிகருக்கு இது நான்காவது திருமணம் என்பதும் திரையுலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், தெலுங்கு சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணனுமான நரேஷ், கன்னட நடிகை பவித்ரா லோகேஷை திருமணம் செய்ய உள்ளார். இதற்கான அறிவிப்பை அவர், பவித்ராவை முத்தமிட்டு வெளியிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த நடிகை பவித்ரா லோகேஷ், கன்னடம், தெலுங்கு மற்றும் சில தமிழ்ழ் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில், தெலுங்கு நடிகர் நரேஷை ரகசிய திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வருவதாக சொல்லப்பட்டது.
ஆனால், இதை இருவரும் மறுத்து வந்த நிலையில், மைசூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் இருவரும் ஒன்றாக இருந்த போது, நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி, அவர்களை பிடித்துவிட்டார். மேலும், அங்கேயே இருவரையும் செருப்பால் அடிக்க அவர் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போலீசார் அவரை சமாதானப்பாடுத்தினார்கள்.
இந்த நிலையில், நடிகர் நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், அதற்கான அறிவிப்பாக, இருவரும் ஒன்றாக இணைந்து புத்தாண்டை கொண்டாடியதோடு, அந்த நிகழ்வில் இருவரும் உதட்டோடு உதடு முத்தமிட்டுக்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
நடிகை பவித்ரா லோகேஷ், தனது இரண்டு கணவர்களை விவாகரத்து செய்துவிட்டது போல், நடிகர் நரேஷும் ஏற்கனவே திருமணம் செய்த இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்துவிட்ட நிலையில், மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதியையும் விவாகரத்து செய்ய நீதிமன்றத்தி மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...