பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால், தமிழ் சினிமாவி வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆவார். ‘கபாலி’ போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் இவர், பல படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
தற்போது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்து வரும் சாக்ஷி அகர்வால், அப்படத்திற்காக பல அதிரடி சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கிறார்.
மீபத்தில் சாக்ஷி அகர்வால் நடித்த ஒரு சண்டைக்காட்சி வடபழனியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் படமாக்கப்பட்டது. சண்டைக் காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் வடிவமைத்து இயக்கினார். அதில் சாக்ஷி அகர்வால் டூப் போடாமல் பல ரிஸ்க்கான காட்சிகளில் நடித்ததைப் பார்த்து கனல் கண்ணன் வியப்படைந்ததோடு, அவரை வெகுவாக பாராட்டவும் செய்தார்.
சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மற்றொரு நாயகனாக யுவன் நடிக்கிறார். ராணுவ வீரராக நடிக்கும் இவர் இப்படத்திற்குப் பிறகு ஒரு சிறந்த ஆக்சன் ஹீரோவாக பேசப்படுவார் என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகிறார். ஏனென்றால் அவர் இரண்டு சண்டைக் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இவர்களுடன் இனியா, பருத்திவீரன் சரவணன், டயானா ஸ்ரீ, இமான் அண்ணாச்சி, ரோகிணி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
பரபரப்பான படங்களுக்குப் பெயர் பெற்றவர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் .'சட்டம் ஒரு இருட்டறை' படத்திலிருந்து தனது பரபரப்பைத் தொடங்கியவர் பல படங்களில் சட்டத்தை விளையாட வைத்தவர், இப்போது 'நான் கடவுள் இல்லை' படத்திலும் தொடர்கிறார். அவரிடம் வந்த அந்த சக்தி இன்னும் குறையாமல் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்தப் படம் சாட்சியாக இருக்கும்.
தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ‘நான் கடவுள் இல்லை’ படம் வரும் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...