சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பலர் வெள்ளித்திரையில் நாயகன், நாயகியாக அறிமுகமாகி வகிறார்கள். அந்த வகையில், ’பரிவர்த்தனை’ என்ற படத்தின் மூலம் ‘நம்ம வீட்டு பொண்ணு’ என்ற தொடரில் நடித்து வரும் சுர்ஜித் நாயகனாகவும், ‘ஈரமான ரோஜாவே’ தொடரில் நடித்து வரும் சுவாதி நாயகியாகவும் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார்கள்.
எம்.எஸ்.வி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ‘பொறி’ சக்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள இப்படத்திற்கு எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே ‘வெத்து வேட்டு’, ‘தி பெட்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
சுர்ஜித் மற்றும் சுவாதியை போல் பல்வேறு தொலைக்காட்சியில் நடித்து வரும் ராஜேஸ்வரி, பாரதி மோகன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் விக்ரம் ஆனந்த், மாஸ்டர் விதுன், சுமேகா, ஹாசினி, ரயில் கார்த்தி, திவ்யா ஸ்ரீதர், பாரதி, மேனகா, சுண்ணாம்பு செந்தில், வெற்றி நிலவன், கார் செல்வா ஆகியோரும் நடித்துள்ளனர்.
கே.கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படட்திற்கு ரஷாந்த் அர்வின் இசையமைத்திருக்கிறார். பன்னீர் செல்வம் படத்தொகுப்பு செய்ய, தீனா நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் மணிபாரதி கூறுகையில், “காத்திருந்தால் காலம் கடந்தாலும் காதல் கைகூடும் என்ற கருத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க இளமை ததும்பும் காதல் கதையாக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை முறையில் எதை எதையோ பரிவர்த்தனை செய்கிறோம், அது போல இந்த காதல் பரிவர்த்தனையும் அனைவராலும் ரசிக்கும்படியாக இருக்கும்.” என்றார்.
படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டத்தில் இருக்கும் ‘பரிவர்த்தனை’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...