Latest News :

மீண்டும் கமல் சாரை வைத்து படம் தயாரிப்போம் - இயக்குநர் லிங்குசாமி அறிவிப்பு
Wednesday January-04 2023

‘ஆனந்தம்’, ‘ரன்’, ‘சண்டைக்கோழி’ என தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கிய என்.லிங்குசாமி ‘திருப்பதி பிரதர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல வெற்றி திரைப்படங்களை தயாரித்ததோடு, பல படங்களை வெளியிட்டும் வந்தார்.

 

லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் சார்பில் பல படங்களை வெளியிட்டு வந்த நிலையில், சில வருடங்களாக இந்நிறுவனம் படம் தயாரிப்பு மற்றும் விநியோக பணிகளை நிறுத்தி வைத்திருந்தது.

 

இந்த நிலையில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மீண்டும் பட தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட தொடங்கியுள்ளது. சிறு இடைவெளிக்குப் பிறகு அந்நிறுவனம் ‘பிகினிங்’ என்ற படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.

 

ஆசியாவின் முதல் பிளவு திரையில் எடுப்பக்கப்பட்ட படம் என்ற பெருமையோடு இப்படம் உருவாகியுள்ளது. அதவாது, ஒரே திரையை இரண்டு பாகங்களாக பிரித்து, இரண்டு கதைகளை ஒரே நேரத்தில் காட்சிப்படுத்தி சொல்வது தான் பிளவு திரை என்று சொல்கிறார்கள்.

 

அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்கியிருக்கும் இந்த படத்தில் வினோத் கிஷன், கெளரி கிஷன்,  மகேந்திரன், சச்சின், சுருளி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

வரும் ஜனவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் லிங்குசாமி மற்றும் ‘பிகினிங்’ (Beginning) படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் என்.லிங்குசாமி, “இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் அதாவது, ஒளிப்பதிவாளர் இந்த லென்ஸை உபயோகப்படுத்தினேன் என்றார், கலை இயக்குநர் புதியதாக ஒன்றை பயன்படுத்தினோம் என்றார். அது தான் புதியதாக படம் எடுப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனுபவம். ஆனந்தம் படம் எடுத்தபோது என்ன உணர்ந்தேனோ, அதை இந்த படத்திலும் உணர்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மிக சவாலாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது. மிகவும் திறமையான இயக்குநர், நுணக்கமான அழகான இயக்குநர் என்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது. இப்படம் எடுப்பதற்கு ஜெகன் அம்மா தான் நிலத்தை விற்று பணம் கொடுத்தார் என்று தெரிந்ததும், இப்படத்தின் ஆதரமான அடித்தளம் அங்கேயே தொடங்கிவிட்டது. உனது அம்மாவும், எனது அம்மாவும் உணர்வு வேறு வேறு அல்ல. ஒரு சரியான நபருக்கு துணையாக இருக்கிறோம் என்று மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆகையால், அவ்வளவு சாதாரணமாக இந்த துறையை விட்டு செல்ல மாட்டீர்கள், இந்த துறையும் உங்களை விடாது.

 

Beginning Press Meet

 

இப்படத்தை பிருந்தா சாரதியும், எடிட்டர் லெனினும் பார்த்து விட்டு, இது விருது படமோ, ஓடிடி படமோ கிடையாது, திரையரங்கிற்கான படம் என்றார்கள். அதை 3 திரையரங்கில் உணர்ந்தேன். அதேபோல், இப்படம் வெளியானதும் இருக்கும் என்று நம்புகிறேன். பிகினிங் படத்தைத் தொடர்ந்து திருப்பதி பிரதர்ஸ் மற்றும் மாஸ்டர்பீஸ்-ம் பல நல்ல படங்களை வெளியிடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், இவர்களைப் போல் சரியான ஆட்கள் இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு ஆதரவளிப்பேன். சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சிதான். என் பின்னாடி 40 பேர் இருக்கிறார்கள். அனைவரும் ஒரே எண்ணத்தில் சேர்ந்த கூட்டு முயற்சி தான் வெற்றியாகும். இதுவரை வெற்றிபெற்ற பெரிய கலைஞர்களுக்கும் அது நிகழ்ந்துள்ளது.

 

இப்படத்தில் நடித்த அனைவரையும் நன்றாக நடித்திருக்கிறீர்கள். பாராட்டினால் எல்லோரும் இயக்குநர் தான் காரணம் என்று கூறுவார்கள். இயக்குநர் அனைவரிடமும் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார். எதிர்காலத்திலும் என்னுடைய நிறுவன படங்களிலும் உங்களை பயன்படுத்துவேன். இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற காரணமாக இருந்த ஜான்சன் சாருக்கு நன்றி.

 

இதுவரை எனது அனைத்து படங்களுக்கு ஆதரவளித்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கும் அதேபோல் ஆதரவு தாருங்கள்.

 

என் இயக்கத்தில் இரண்டு, மூன்று மாதங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகும். உத்தமவில்லன் படத்தை திறமையாக, கடின உழைப்போடு தான் எடுத்தார்கள். ஆனால், அப்படம் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்தது உண்மை தான். முதலில் நாங்கள் முடிவெடுத்தது #பாபநாசம் தான். ஆனால், கமல் சார் ஆசைப்பட்டதால் உத்தம வில்லன் படத்தை எடுத்தோம். அது அவருக்கும் தெரியும். உத்தமவில்லன் படத்தின் நஷ்டத்தை ஈடுசெய்ய கமல் சார் ஒரு படம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.” என்றார்.

 

‘பிகினிங்’ பட இயக்குநர் ஜெகன் ஜெயா பேசுகையில், “ஹலோ மைக் டெஸ்டிங் என்று ஆரம்பித்து தான் எனது வாழ்க்கை. எனது அப்பா சவுண்ட் செட்டில் பணியாற்றினார். அப்போது மைக் வைத்திருந்தால் அவர்களை ஹீரோ மாதிரி நினைத்துக் கொள்வோம். இப்படிதான் சினிமா எனக்கு அறிமுகம். 

 

இன்று எது நல்ல படம் என்று தெரியாத அளவிற்கு அனைத்தும் ஒன்றாக கலந்து விட்டது. உதவி இயக்குநராக திருப்தியாக பணியாற்றவில்லை. 10 வருடங்களுக்குப் பிறகு இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறேன். எழுத்து சிறப்பாக இருந்தால் வெற்றியடைவது உறுதி. அதை என் அனுபவத்தில் கண்டேன்.

 

என் அம்மாவிடம் கதையை கொடுத்தேன். எனக்காக வைத்திருந்த இடத்தை விற்று கொடுத்தார். என் நண்பர்களும் உதவியாக இருந்தார்கள். ஒரு நல்ல படத்தை எடுப்பதை விட விநியோகம் செய்வதற்கு தான் மாபெரும் சவாலாக இருக்கிறது.

 

லிங்குசாமி சாரின் உதவியாளர்கள் மூன்று முறை பார்த்து பிடித்ததும் சாருக்கு கூறினார்கள். பின்பு சாரும் பார்த்தார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் நிலைத்து நிற்க வேண்டும். என்னுடன் இவர்கள் இருந்தால், இன்னும் 10 படங்கள் இயக்குவேன். தொடர்ந்து நல்ல படங்கள் கொடுப்பேன். பத்திரிகையாளர்களின் விமர்சனங்களை மிகவும் மதிக்கிறேன்.” என்றார்.

 

சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு படம் குறித்து பேசிய எழுத்தாளர் பிருந்தா சாரதி, “நீண்ட நாட்களுக்குப் பிறகு திருப்பதி பிரதர்ஸ் வழங்கும் என்பதை திரையில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தரமான படத்தை வெளியிடும் நிறுவனமாக லிங்குசாமி தொடங்கியபோது, மலையேறுகிறவன் மனநிலை போல் நாம் ஏறிக்கொண்டே இருந்தால் வெற்றியடைவது நிச்சயம். ஆனந்தம் படத்தின் போது இருந்தே அவர் உடன் இருக்கிறேன். நிறைய கவிதை அனுப்பி எப்படி இருக்கிறது என்று கேட்பார். சென்னையில் ஒரே அறையில் தங்கினோம். உதவி இயக்குநராக ஏ.வெங்கடேஷிடம் சேரும்போது நான் உடன் இருந்தேன். பல படங்களை விநியோகம் செய்வதற்கு தேர்ந்தெடுக்குமாறு அழைப்பார். அதேபோல் தான் இந்த படத்தையும் பார்க்க அழைத்தார்.

 

தொலைக்காட்சியில் செய்தி ஓடிக் கொண்டிருக்கும் மறுபுறம் வீடியோ ஓடிக் கொண்டிருக்கும். கீழே ஸ்கோரிலிங் ஓடிக் கொண்டிருக்கும். அனைத்தையும் பார்த்து பழக்கப் பட்ட நாம்,  இந்த படத்தையும் பார்க்க முடியும். விருது வாங்கும் படம் என்ற அடிப்படையில் தான் இப்படத்தைப் பார்க்கச் சென்றேன். ஆனால், முழுக்க முழுக்க கமர்ஷியல் திரைப்படம். நகைச்சுவையோடு சிறப்பாக இருக்கிறது. கௌரி திரிஷாவை போல் வளருவார்.” என்றார்.

Related News

8756

”பட்ஜெட் இல்லை..” - ’விஜய் 69’ படத்திற்கு இப்படி ஒரு நிலையா?
Monday November-04 2024

அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய், விரைவில் அரசியல் பணிகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு தனது படத்தின் பணிகளில் தீவிரம் காட்ட உள்ளார்...

’அமரன்’ படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Thursday October-31 2024

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...

பரபரப்பான சம்பவங்கள் பின்னணியில் உருவான ‘முரா’ பட டிரைலர் வெளியானது!
Thursday October-31 2024

‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் ‘முரா’...

Recent Gallery