அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜயின் ‘வாரிசு’ படங்கள் இரண்டுமே பொங்கல் வெளியீடாக ஒரே நாளில் வெளியாக உள்ளது. இதனால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘துணிவு’ படம் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்த சில நாட்களில் ‘வாரிசு’ படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டது. முழுக்க முழுக்க அரசியல் வசனங்கள் அரங்கிய ‘வாரிசு’ படத்தின் டிரைலரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு, அவரது அரசியல் வருகை தொடர்பாக பேசி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, வாரிசு மற்றும் துணிவு படம் பற்றி ஒட்டு மொத்த ஊடகங்களும் பேச தொடங்கியிருப்பதோடு, நிருபர்கள் சிலர் சொந்தமாக கற்பனை கதைகளையும் அவிழ்த்துவிட்டு வருகிறார்கள். குறிப்பாக அஜித்தின் துணிவு டிரைலரை பார்த்து விஜய் மிரண்டு விட்டதாக சொல்லி வருகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க, துணிவு மற்றும் வாரிசு படங்களில் வெளியீட்டு தேதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருந்த ரசிகர்கள் தற்போதே பொங்கலை கொண்டாட தொடங்கி விட்டார்கள். ஆம், இரண்டு படங்களில் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களும் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் 15 ஆம் தேதி என்றாலும் தொடர் விடுமுறை காரணமாக ஜனவரி 11 ஆம் தேதியே இரண்டு படங்களும் வெளியாகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...