சூர்யா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ‘சிங்கம் 2’ மற்றும் கார்த்தி நடிப்பில் வெற்றி பெற்ற ‘தேவ்’, ‘சர்தார்’ ஆகிய படங்களை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘காரி’ என தொடர்ந்து வெற்றி படங்களை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண் குமார், தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பதோடு, தரமான படங்களையும், கமர்ஷியலாக வெற்றி பெறும் படங்களையும் தயாரித்து வருகிறார்.
‘காரி’ படத்தை தொடர்ந்து பல படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார், சமீபத்தில் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘வதந்தி’ தொடரின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கொலைகாரன்’ படத்தை இயக்கியிருக்கும் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.
இப்படம் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததோடு, பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஆண்ட்ரூ லூயிஸ் இணைந்திருக்கும் தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட முழு விவரங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கும் நிலையில், தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் மற்றும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இணைந்திருப்பது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...