‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தையடுத்து உதயநிதியின் அடுத்த வெளியீடாக வர உள்ள படம் ‘இப்படை வெல்லும்’. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை கெளரவ் இயக்குகிறார். மேலும், பிரியதர்ஷன் இயக்கும் ஒரு படத்திலும் உதயநிதி நடித்து வருகிறார்.
மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக எடுத்து முடிக்கப்பட்டாலும், படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், இப்படத்திற்கு ‘நிமிர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பை மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தில் உதயநிதியுடன் இயக்குநர் மகேந்திரன், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தமிழ் ரீமேக்கிற்கு சமுத்திரக்கனி வசனம் எழுதியுள்ளார். தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி வருகிறார்கள்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...