ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில் புதுமையான திகில் படத்தை தயாரிக்கும் என்.ஹாரூன், அப்படத்தின் கதை எழுதி இயக்கவும் செய்கிறார். சோனியா அகர்வால் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் எளிமையான முறையில் நடைபெற்றது.
நிஜத்தில் நம் கண் முன் நடக்கும் பல அமானுஷ்யமான சம்பவங்களுக்கு, உண்மையில் ஏன் எப்படி நடக்கிறது என்பதற்கான பதில்கள் நம்மிடம் இல்லை. அப்படி நடந்த சில சம்பவங்களின் பாதிப்பில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஹாரர் காமெடியாக இல்லாமல், நம்மை மிரள வைக்கும் மிரட்டலான ஹாரர் திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது.
நடிகைகள் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் நாயகன் பாத்திரத்தில் ரோஷன் நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின், இயக்குநர் சுப்பிரமணியம் சிவா இருவரும் மாறுபட்ட முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது. திகில் படக்காதலர்களுக்கு ஒரு அருமையான விருந்தாக இப்படம் இருக்கும். படத்தின் பெயர் மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
கே.எம்.ரயான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜயகுமார் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். புஜு.வ, டான் போஸ்கோ ஆகியோர் படத்தொகுப்பு செய்ய, ஃபயர் கார்த்திக் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். டான் பாலா கலையை நிர்மாணிக்க, ரிச்சர்ட் நடன காட்சிகளை வடிவமைக்கிறார். விவேகா மற்றும் குட்டி ரேவதி பாடல்கள் எழுதுகிறார்கள்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...