தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் மெகா ஹிட் பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் பரத்வாஜ். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று பல மொழிகளில் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வரும் பரத்வாஜ், ’காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’, ‘அசல்’ என பல அஜித் படங்களுக்கு இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் பரத்வாஜ் தொடர்ந்து அஜித் படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், அவரது மகள் பாடகி ஜனனி என்னவோ தீவிரமான விஜய் ரசிகராக இருக்கிறார். அதிலும், சாதாரண ரசிகை அல்ல, விஜய் படம் வெளியாகும் போது கனடா நாடே அதிரும் வகையில் தெறிக்க விடும் வெறித்தனமான ரசிகராக வலம் வருகிறார். அவர் மட்டுமல்ல, அவருடைய கணவர், மகள் என குடும்பமே விஜய் ரசிகர்கள் தான்.
பாடகி ஜனனி, அவரது கணவர் கார்த்திக் வெங்கட்ராமன், மகள் தியா ஆகியோர் கனடா நாட்டில் வசித்து வருகிறார்கள். கார்த்திக் வெங்கட்ராமன் கனடா நாட்டின் விஜய் மக்கள் இயக்க தலைவராக இருக்கிறார். விஜய் பிறந்தநாள் மற்றும் அவரது புது படங்கள் வெளியாகும் போது கனடா நாட்டில் கொண்டாடி தீர்ப்பதோடு, பல்வேறு சமூக பணிகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இரத்த முகாம் நடத்துவது உள்ளிட்ட பல ஆக்கப்பூர்வமான பணிகளை விஜய் மக்கள் இயக்கத்தின் பேரில் செய்து வரும் இவர்கள், விஜயின் ‘வாரிசு’ படத்தின் வெளியீட்டை கொண்டாடிய விதம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் பரத்வாஜின் மகள் பாடகி ஜனனி, அவரது கணவரும், விஜய் மக்கள் இயக்க தலைவருமான கார்த்திக் வெங்கட்ராமன், இவர்களது மகள் தியா மற்றும் ஏராளமான சிறுவர்கள், விஜயின் புகைப்படம் அச்சிடப்பட்ட உடையை அணிந்துக்கொண்டு கனடா நாட்டில் ‘வாரிசு’ படம் வெளியான தியேட்டரில் ”ரஞ்சிதமே ரஞ்சிதமே...” பாடலை பாடி நடனம் ஆடினார்கள். இவர்களது நடனம் பெரும் வரவேற்பு பெற்றதோடு சோசியல் மீடியாவில் வைரலாகியும் வருகிறது.
#வாரிசு பட பாடலுக்கு இசையமைப்பாளர் பரத்வாஜ் மகள் ஜனனி, தியேட்டரில் தனது கணவர் மற்றும் மகளுடன் நடனம்!
— CinemaInbox (@CinemaInbox) January 13, 2023
கனடாவில் வசிக்கும் ஜனனி, தனது கணவரும், விஜய் மக்கள் இயக்க தலைவருமான கார்த்திக், மகள் தியா உடன் 'ரஞ்சிதமே... ரஞ்சிதமே'...பாடலை பாடி, நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்! pic.twitter.com/88igtmfUEq
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...