வைகை புயல் என்ற பட்டத்தோடு, காமெடியில் கலக்கி வந்த வடிவேலு, திடீரென்று அரசியலில் குதித்ததால் சினிமாவில் காணாமல் போனார். சுமார் 3 ஆண்டுகள் கழித்து மீண்டு நடிக்க வந்தவர், ஹீரோவாக தான் வருவேன், என்ற பிடிவாதத்தினால், இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து, தோல்வியை கண்டவர், பிறகு தான் புரிந்துக்கொண்டார் நமக்கு தெரிந்தது காமெடி தான் என்று.
இதை தொடர்ந்து மீண்டும காமெடி வேடங்களில் நடிகக் தொடங்கியுள்ள வடிவேலு பல படங்களில் நடித்து வருவதோடு, விஜயின் மெர்சல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் - வடிவேலு கூட்டணி மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் கூட்டணி என்பதால், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே வடிவேலு ஹீரோவாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம பாகமான ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதன் மூலமும் வடிவேலுவின் மவுசு மீண்டும் உயரத் தொடங்கியது.
இந்த நிலையில், ’இம்சை அரசன் 24ம் புலிகேசியின்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்ற தகவல், படத்தின் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்களிடமே சொல்லப்படாததால், அநேகமாக படம் டிராப்பாகலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த தகவல் குறித்து தயாரிப்பு தரப்பு இதுவரை விளக்கம் தராதநிலையில், இந்த தகவலை அறிந்த வடிவேலு ரொம்பவே அதிர்ச்சியடைந்துள்ளாராம்.
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...
பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் ஆர்...