Latest News :

மகத் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவிற்கு தேவை - தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் பாராட்டு
Thursday February-02 2023

மகத் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘காதல் கண்டிஷன் அப்ளை’. இதில் நாயகியாக சனா கான் நடித்திருக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, இயக்குநர் வெங்கட் பிரபு, டிடி, அபிஷேக், மகாலட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

அறிமுக இயக்குநர் ஆர்.அரவிந்த் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார். கார்த்திக் நல்லமுத்து மற்றும் ஆனந்த் ஜெரால் ஓளிப்பதிவு செய்துள்ளனர். மதன் கார்கி பாடல்கள் எழுதியுள்ளார்.

 

நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில், லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் வழங்கும் ‘காதல் கண்டிஷன் அப்ளை’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் ராதாரவி, தயாரிப்பாளர்கள் சிவி குமார், எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி, பிக் பாஸ் வெற்றியாளர் அசீம் உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் நிதின் சத்யா பேசுகையில், “"இது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஜாலியான ஒரு பீல் குட் திரைப்படம். இந்த படம் கோவிட் காரணமாக சிறிது தாமதமானது. ஆனால் படத்தில் நடித்த அனைவரும் இந்த படத்திற்காக தங்களது முழு ஆதரவையும் கொடுத்தனர். பலருடைய உத்வேகத்தாலும், உதவியாலும் இந்த படம் நன்றாக உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள். நல்ல நட்புடன் சேர்ந்து நல்ல படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது தான் இந்த படம்.” என்றார்.

 

தயாரிப்பாளர் ரவீந்தர் பேசுகையில், “நிதின் சத்யாவிற்கும், எனக்கும் இடையேயான புரிதல் சிறப்பானதாக இருக்கும். திரைப்படத்தை அதிக ஆர்வத்துடன் எடுக்க கூடியவர் நிதின். மகத் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவிற்கு தேவை, விவேக் பிரசன்னா போன்ற ஆகச்சிறந்த நடிகர்கள் கொண்டாடப் பட வேண்டியவர்கள், இவர்கள் இந்த படத்தில் இருப்பது மகிழ்ச்சி. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அறிவும், திறமையும் அதிகமாக உடையவர்கள். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நான் தயாரித்ததில் இந்த படம் தான் எனக்கு ஒரு லாபகரமான படமாக அமைந்துள்ளது. அனைவருக்கும் நன்றிகள்.” என்றார்.

 

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில், “ரவீந்தர் கலைஞர்களை மதிக்க கூடியவர். அவருடைய இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் எனது நண்பர், அவருக்கு இது தான் முதல் படம் என்பது எனக்கு ஆச்சர்யமளிக்கிறது. படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன.” என்றார்.

 

நடிகர் ராதாரவி பேசுகையில், “நிதின் சத்யா, ரவிந்தர் இருவரும் எனது நீண்ட கால நண்பர்கள். நிதின் போன்ற உழைப்பாளிகளுக்கு உதவுவது அனைவரது கடமை. திரைக்கலைஞர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர் ரவீந்தர். அவர் அழைத்ததால் தான் இந்த விழாவிற்கு வந்தேன். இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசுகையில், “காதல் படங்கள் இப்போது தமிழ் சினிமாவின் தேவை. தொடர்ந்து வெற்றிகரமான படங்களை எடுத்து வரும் தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துகள். இந்த படத்தின் இசையமைப்பாளர் ரமேஷ், அடுத்து தோனியின் தயாரிப்பில் படம் இயக்குகிறார், அவர் திறமைசாலி, அவருக்கு எனது வாழ்த்துகள். இந்த படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது, வெற்றிபெற வாழ்த்துகள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் முரளி பேசுகையில், “இந்த படம் கோவிட் காலத்தில் மாட்டிகொண்டது. அதை தாண்டி தான் இந்த படம் இப்போது தயாராகி உள்ளது. இது போன்ற படங்கள் தான் இப்போது தேவை. லவ் டுடே போன்ற பொழுதுபோக்கு திரைப்படமாக இது அமையும் என்று நம்புகிறேன். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்.” என்றார்.

 

நடிகர் விவேக் பிரசன்னா பேசுகையில், “இந்த படம் எல்லோருக்கும் பிடித்தமான, ஜனரஞ்சகமான படமாக வந்து இருக்கிறது. இந்த படம் எல்லோருடைய வாழ்கையிலும் நடந்த ஒரு நிகழ்வாக இருக்கும். அதனால் எல்லோருக்கும் இந்த படம் ஒத்துப்போகும். படம் பார்த்துவிட்டு உங்கள் எண்ணங்களை கூறுங்கள். இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசுகையில், “படத்தின் இசையமைப்பாளர் பல்வேறு திறமைகள் கொண்டவர், அவருக்கு எனது வாழ்த்துகள். நடிகர் மகத்துக்கு இந்த படம் வெற்றிப்படமாக அமைந்து அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் குவிய வாழ்த்துகள். தயாரிப்பாளருக்கு இந்த படம் வெற்றி படமாக அமைய வாழ்த்துகள்.” என்றார்.

 

Kadhal Conditions Apply Audio Launch

 

நடிகர் அபிஷேக் பேசுகையில், “காதல் படங்கள் எடுப்பதற்கு ஒரு பொறுப்பு தேவை. படம் வெளியான பிறகு, ஒளிப்பதிவாளர் அனைவராலும் பேசப்படுவார். நிதின் சத்யா அனைவருக்கும் இடம் கொடுக்க ஆசைப்படுபவர். அனைவரையும் மேலே தூக்கி விட கூடியவர். இயக்குநர் உடைய அர்ப்பணிப்பு அனைவரையும், அவருடன் இணைந்து பயணிக்க வைக்கிறது. இந்த படத்திற்கு வெற்றிகள் குவிய வேண்டும்.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து பேசுகையில், “எனக்கு முழு சுதந்திரமும், எனக்கு தேவையான அனைத்தையும் கொடுத்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் எனது நன்றிகள். இந்த படத்தில் நடித்த அனைவரும் அதிக ஒத்துழைப்பு கொடுத்தனர். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள்.” என்றார்.

 

இசையமைப்பாளர் தமிழ்மணி பேசுகையில், “எனக்கு வாய்ப்பளித்த தயரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. இந்தப் படம் நண்பர்களுடன் சேர்ந்து பயணித்த ஒரு படம். இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.” என்றார்.

 

நடிகை சனா பேசுகையில், “என்னை இந்த படத்தில் நடிக்க வைத்ததற்கு தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. மொழி தெரியாத எனக்கு காட்சிகளை சரியாக புரிய வைத்து, என்னை நடிக்க வைத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. என்னை அழகாக காட்டிய ஒளிப்பதிவாளருக்கு நன்றி. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

இயக்குநர் ஆர்.அரவிந்த் பேசுகையில், “புது இயக்குநர்களை வைத்து படம் எடுப்பதில் பொருளாதார சிக்கல் இருக்க தான் செய்கிறது. அதை தாண்டி தயாரிப்பாளர் நிதின் சத்யா, ரவீந்தர் தொடர்ந்து புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறார்கள், அதற்கு நன்றிகள். இது தொடர வேண்டும். இந்த படத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.” என்றார்.

 

நடிகர் மகத் பேசுகையில், “இது எனது 16 ஆவது படம், ஆனால் ஹீரோவாக முதல் படம். எனது நண்பர் நிதின் சத்யா, கோவிட் காலத்தில் என்னை அணுகி படம் பண்ணலாம் என்று கூறினார். இயக்குநர் அரவிந்த் உடன் பல ஆண்டுகளாக பயணித்து இருக்கிறேன், அவருடன் படம் செய்தது மகிழ்ச்சி. இசையமைப்பாளர் ரமேஷ் இந்த படத்தில் அறிமுகமானது எனக்கு மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர், நடிகர்கள் அனைவரும் இந்த படத்தை மேம்படுத்தியுள்ளனர். இந்த படம் பொருளாதார சிக்கலில் சிக்கி இருந்த போது, ரவீந்தர் தான் உதவினார். அவருக்கு எனது நன்றிகள். நிதின் சத்யா, ரவீந்தர் போன்ற ஆட்கள் தமிழ் சினிமாவிற்கு தேவை. அனைவருக்கும் நன்றிகள்.” என்றார்.

 

கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள ‘காதல் கண்டிஷன் அப்ளை’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related News

8796

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery