ஏவிஎம் தயாரிப்பில் பாண்டியராஜன் நடித்து இயக்கிய படம் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’. மனோரமா பாட்டியாக நடித்து 1988 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இதே தலைப்பில் மீண்டும் ஒரு படம் உருவாகியுள்ளது.
என்ஜாய் சினிமாஸ் மற்றும் ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படத்தை ஹெம சூர்யா இயக்கியிருக்கிறார். கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் கதை மற்றும் வசனத்தை சுகுனா குமார் எழுதியுள்ளார்.
விஜய் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சசிகுமார் படத்தொகுப்பு செய்ய, மணிமாறன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ரவி கணேஷ் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மக்கள் தொடர்பாளராக டைமண்ட் பாபு பணியாற்றியுள்ளார்.
கே.எல்.தனசேகர் மற்றும் சாய் சரவணன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நளினி பாட்டியாக நடித்திருக்கிறார். ஆர்.பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.ஜே.விஜய், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், அனுஷீலா, கே.பி.ஒய்.பாலா, செந்தில் குமார், காதல் சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிப்ரவரி 3 ஆம் தேதி சென்னை சாந்தம் திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர்கள் ராஜேஷ், எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், ஆர்.பாண்டியராஜன், ஜாகுவார் தங்கம், தயாரிப்பாளர் ரிஷிராஜ், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, நடிகைகள் நளினி, அனுஷீலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
திரைப்பட இசையமைப்பாளர் சங்க தலைவர் தினா இசைத் தட்டை வெளியிட இசையமைப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் பெற்றுக்கொண்டார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...