தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நடிகரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘குஷி’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகமல் இருந்தது.
இந்த நிலையில், படத்தின் இயக்குநர் சிவ நிர்வானா, நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் இசையமைப்பாளர் ஹேஷாம் ஆகியோர் சமீபத்தில் படம் குறித்து முக்கிய சந்திப்பு ஒன்றினை நடத்தி படம் குறித்து விவாதித்திருப்பதோடு, ‘குஷி’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை விரைவில் துவங்கதென்றும் முடிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 'குஷி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குவது என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள படத்தின் நாயகியான நடிகை சமந்தாவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'குஷி' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதனை 'குஷி' படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் தொடர்பான தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...