பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போட்டியாளர்களில் வெற்றி என்னவோ ஒருவருக்கு தான். ஆனால், லாபமோ அப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் கிடைத்து வருகிறது.
பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பட வாய்ப்புகளும், விளம்பர பட வாய்ப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத குண்டு ஆர்த்தி, தன்னிடம் பேட்டி கேற்கும் மீடியாக்களிடம் பணம் பெற்று, அதையே புது பிஸ்னஸாக்கியுள்ளாராம்.
ஆரவ், ரைசா, ஜூலி, சினேகன் உள்ளிட்ட பல பிக் பாஸ் போட்டியாளர்கள் பிஸியாக பேட்டி கொடுத்து வந்தாலும், யாரிடமும் எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை. ஆனால், குண்டு ஆர்த்தியிடம் பேட்டி என்று கேட்டால், “எவ்வளவு கொடுப்பீங்க...” என்று கேட்கிறாராம். சரி எவ்வளவு வேண்டும், என்று திருப்பி கேட்டால், ”அவங்க இவ்வளவு கொடுத்தாங்க..நீங்க பார்த்து செய்ங்க...” என்று கேட்கிறாராம்.
இதற்கு முன்பு, பேட்டி கொடுக்க பணம் கேட்காத ஆர்த்தி, தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது மேல் விழுந்துள்ள புது வெளிச்சத்தை புது பிஸ்னஸாக மாற்றி, நல்லா கல்லா கட்ட தொடங்கியுள்ளார்.
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...
பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் ஆர்...