‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் பா.இரஞ்சித், தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார். அவரது தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான ‘பொம்மை நாயகி’ நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தனது அடுத்த தயாரிப்பை பா.இரஞ்சித் அறிவித்துள்ளார்.
பா.இரஞ்சித் தயாரித்த ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தை இயக்கிய அதியன் ஆதிரை இயக்கும் இப்படத்திற்கு ‘தண்டகாரண்யம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் பி.லிட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் தினேஷ், கலையரசன், ஷபீர் , பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ் , யுவன் மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன், உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். செல்வா.ஆர்.கே படத்தொகுப்பு செய்ய, த.ராமலிங்கம் கலையை நிர்மாணிக்கிறார். உமாதேவி, தனிக்கொடி, அறிவு ஆகியோர் பாடல்கல் எழுதுகிறார்கள். பிசி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, ஸ்ரீகிரிஷ் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார்.
தற்போது இப்படத்தின் முதல் பார்வை வெளியாகியிருக்கும் நிலையில், இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு ஓசூர் மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் நடைபெற உள்ளது.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ’ஜெ பேபி’ மற்றும் தலைப்பு வைக்கப்படாத இரண்டு படங்கள் தயாரிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...