‘பட்டத்து அரசன்’ படத்தை தொடர்ந்து அதர்வாவின் அடுத்த வெளியீடாக ‘தணல்’ படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கும் இப்படத்தை அன்னை பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம். ஜான் பீட்டர் தயாரிக்கிறார்.
‘100’ மற்றும் ‘ட்ரிகர்’ படங்களை தொடர்ந்து இப்படத்தில் மீண்டும் போலீஸ் வேடத்தில் அதர்வா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார். இவர்களுடன் அஷ்வின் காக்குமானு, ஷா ரா, பரணீ செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்ஷ்மி பிரியா, பரத், தௌபிக், சர்வா, பிரதீப் விஜயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். விவேக் மற்றும் கார்த்திக் நேதா பாடல்கள் எழுதியுள்ளனர். எஸ்.அய்யப்பன் கலையை நிர்மாணிக்க, கலைவாணன் படத்தொகுப்பு செய்கிறார். ஆர்.சக்தி சரவணன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு, திரைப்பட வெளியீட்டு தேதி போன்றவற்றை ஒவ்வொன்றாக படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...