Latest News :

பரபரப்பான சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகும் ‘துச்சாதனன்’!
Monday February-13 2023

தாய் திரையரங்கம் சார்பில் எஸ்.அருண் விக்னேஷ் மற்றும் ஆர்.வேல் முருகன் இணைந்து தயாரிக்கும் படம் ‘துச்சாதனன்’. இதில் நாயகனாக விகாஸ் நடிக்கிறார். இவர் ஏற்கனவே ‘அகிலா’, ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’, ‘ஒற்றாடல்’ போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை ரோகிணி நடிக்கிறார். இவர்களுடன் லொள்ளு சபா மனோகர், மில்டன் மேடிசன், பிரபு சாஸ்திரி, வேளாங்கண்ணி, சாய் ரோஹிணி, அருண் விக்னேஷ், மில்டன் மேடிசன், விக்னேஷ் வி.எஸ். சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இவர்களுடன் முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கிறார்கள்.

 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி தளபதி இயக்கும் இப்படத்திற்கு பி.வி.பால முருகன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் பிரபு இசையமைக்கிறார். வி.எஸ்.விக்னேஷ் படத்தொகுப்பு செய்ய, ராக்கி ராஜேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.

 

இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் சென்னையில் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விகாஷ், நாயகி ரோகிணி, நடிகர் லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.

 

இப்படம் குறித்து கூறிய இயக்குநர் தளபதி, “படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு நகைக்கடையில் திருட்டு நடக்கிறது. அந்த திருட்டை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க காவல்துறை களம் இறங்குகிறது. அதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான திருப்பங்களை, விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் சஸ்பென்ஸான காட்சிகள் மூலம் பரபரப்பாக சொல்லியிருக்கிறோம்.

 

Dhuchathanan

 

பாஞ்சாலியின் துகிலை உரித்தவன் மட்டும் துச்சாதனன் இல்லை, மற்றவர்களுக்கு ஏற்படும் அவமானம், இழப்பு போன்ற எதையும் சிந்திக்காமல் தன் சுயநலத்துக்காக மற்றவர்களின் உடைமை, உரிமை, உயிர் போன்றவற்றை உரியும் அனைவரும் துச்சாதனன் தான். அதனால் தான் இந்த தலைப்பு வைத்துள்ளோம். முழுவதும் கிராமம் இல்லாம, நகரமும் இல்லாமல் சிறு டவுனில் கதை நடக்கிறது. அதனால் சத்தியமங்கலம் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். படத்தில் மூன்று பாடல் காட்சிகள் மற்றும் இரண்டு சண்டைக்காட்சிகள் உள்ளது.” என்றார்.


Related News

8812

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery