Latest News :

மீண்டும் வந்தது நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி! - 8 மாநில திரை நட்சத்திரங்களுடன் பிப்ரவரி 18 ஆம் தேதி துவங்குகிறது
Wednesday February-15 2023

சினிமா மற்றும் கிரிக்கெட் இரண்டும் இந்தியர்களின் இரத்தத்தில் கலந்தவைகளாக இருக்கும் நிலையில், இவை இரண்டும் ஒன்றாக கலந்தால் எப்படி இருக்கும்!, அப்படி ஒரு முயற்சியாக கடந்த 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சம் தான் ’சிசிஎல்’ என்று சொல்லப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக். 8 மாநிலத்தை சேர்ந்த முன்னணி திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் போட்டி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை போல் திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற இந்த போட்டியும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படவில்லை.

 

இந்த நிலையில், இந்த ஆண்டு முதல் மீண்டும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அதே 8 மாநிலத்தை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ள இந்த கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

 

தமிழ் சினிமாவின் அணியான சென்னை ரைனோஸ் அணி வீரர்கள் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை ரைனோஸ் அணியின் கேப்டனும் ஐகான் வீரருமான ஜீவா, நட்சத்திர வீரரான விஷ்ணு விஷால், விக்ராந்த், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜ், பரத், ஆதவ் கண்ணதாசன், பால சரவணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டர்கள்.

 

ராய்ப்பூர், பெங்களூர், ஹைதராபாத், ஜோத்பூர், திருவனந்தபுரம் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட ஆறு நகரங்கள் 19 ஆட்டங்களை நடத்தவுள்ளன. இந்த 8 அணிகளுள் ஒன்று  CCL கோப்பையை வெல்லும். 

 

CCL

 

மும்பை ஹீரோஸ் பிராண்ட் அம்பாசிடராக சல்மான்கான் மற்றும் கேப்டனாக ரித்தேஷ் தேஷ்முக், சென்னை ரைனோஸ் கேப்டனாக ஜீவா ஐகான் பிளேயராகவும், விஷ்ணு விஷால் நட்சத்திர வீரராகவும், தெலுங்கு வாரியர்ஸ் அணியில் வெங்கடேஷ் இணை உரிமையாளராகவும், அகில் கேப்டனாகவும் இப்போட்டிகளில் பங்கேற்கின்றனர். 

 

மேலும் மனோஜ் திவாரி போஜ்புரி தபாங்ஸ் கேப்டனாகவும், மோகன் லால் இணை உரிமையாளராக உள்ள கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியில் கேப்டனாக குஞ்சாக்கோ போபன் பங்கேற்க, போனி கபூர் உரிமையாளரான பெங்கால் டைகர்ஸ் அணிக்கு  கேப்டனாக ஜிசுசென் குப்தா, கர்நாடகா புல்டோசர்ஸ் கேப்டனாக சுதீப், பஞ்சாப்  தி ஷேர் அணிக்கு கேப்டனாக சோனுசூத் பங்கேற்கின்றனர்.

 

120க்கும் மேற்பட்ட திரையுலக பிரபலங்கள் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதால் இந்த போட்டிகள் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக அமையுமென  எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற ஸ்டேடியங்கள் முந்தைய சீசன்களில் நிரம்பி வழிந்தன. இந்த முறை மற்ற இடங்களிலும் கூட்டமாக ரசிகர்கள் வருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இப்போட்டிகள் 7 வெவ்வேறு ZEE டிவி நெட்வொர்க்குகளில் நேரடியாகவும் பிரத்தியேகமாகவும் ஒளிபரப்பப்படும். Zee Anmol Cinema சேனல் அனைத்து 19 CCL போட்டிகளையும் ஒளிபரப்பவுள்ளது.

 

மும்பை ஹீரோஸ் போட்டிகள் & பிக்சர்ஸ் இந்தி, பஞ்சாப் தி ஷேர் போட்டிகள் PTC பஞ்சாபியிலும், தெலுங்கு வாரியர்ஸ் போட்டிகள் Zee சினிமாவிலும், சென்னை ரைனோஸ் போட்டிகள் Zee திரையிலும், கர்நாடகா புல்டோசர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ் போட்டிகள் ஜீ பங்களா மற்றும் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் போட்டிகள் ஃப்ளவர்ஸ் டிவியிலும் ஒளிபரப்பப்படும்.

Related News

8817

’அமரன்’ படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Thursday October-31 2024

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...

பரபரப்பான சம்பவங்கள் பின்னணியில் உருவான ‘முரா’ பட டிரைலர் வெளியானது!
Thursday October-31 2024

‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் ‘முரா’...

ஃபேண்டஸி காதல் படமாக உருவாகியுள்ள ‘மெஸன்ஜர்’!
Wednesday October-30 2024

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...

Recent Gallery