தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான சாம் சிஎஸ, இசையமைக்கும் படங்களின் இன்னணி இசைக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவர் இசையமைப்பில் உருவாகும் அனைத்து படங்களும் பின்னணி இசைக்காக பல விருதுகளை குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவை தாண்டி பிற மொழிகளிலும் கவனம் ஈர்த்து வரும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ், ‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கின் மூலம் பாலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய நிலையில், தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், ’தி நைட் மேனேஜர்’ என்ற இந்தி இணையத் தொடருக்கு சாம் சிஎஸ், இசையமைத்துள்ளார். சர்வதேச இசைக்கலைஞர்களின் ஒத்துழைப்புடன் இந்த தொடருக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருப்பதால் பார்வையாளிடத்தில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஹாலிவுட் தொலைக்காட்சி தொடராக வெளியான ‘தி நைட் மேனேஜர்’ தொடர் 6 அத்தியாயங்களை கொண்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த தொடர் தற்போது, இதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இதில், ‘பொன்னியின் செல்வன்’ புகழ் சோபிதா துலிபாலா, அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். பிரியங்கா கோஷ் ,ரூக் நபீல், சந்திப் மோடி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இத்தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகிறது.
டிஜிட்டல் தள பார்வையாளிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘தி நைட் மேனேஜர்’ தொடர் மூலம் இசையமைப்பாளர் சாம் சிஎஸ், பாலிவுட் சினிமாவிலும் முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...