Latest News :

ஓடிடி உலகில் புதிய பாதை அமைத்த ‘அயலி’ இணையத் தொடர்!
Friday February-17 2023

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான ஜீ5 பல வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதன் மூலம் பல வித்தியாசமான படைப்புகள் திரைப்படமாகவும், இணையத் தொடர்களாகவும் வெளியாகி வருகிறது. அந்த வகையில், ஜனவரி மாதம் 26 ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியான இணையத் தொடரான ‘அயலி’ ஓடிடி உலகில் புதிய பாதையை அமைத்துள்ளது.

 

ஒடிடி படைப்புகளுக்கு என்று இருக்கும் வழக்கமான ஜானரில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அதே சமயம் சமூகத்திற்கு சொல்லப்பட வேண்டிய பெண் கல்வி குறித்தும், இன்றும் மக்களிடம் இருக்கும் சில மூட பழக்கங்கள் குறித்தும் இயல்பாக பேசும் விதமாக உருவாகியிருக்கும் ‘அயலி’ 50 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து ஒடிடி உலகில் புதிய சாதனை படத்துள்ளது.

 

இந்த இணையத் தொடர் வெளியாகி நான்கு வாரங்களை கடந்தும், தற்போதுவரை பார்வையாளர்களின் முதல் இருப்பமாக ஒளிபரப்பாகி வரும் ‘அயலி’ தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பார்க்க தொடங்கியிருப்பதோடு, உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

 

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று ‘அயலி’ குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்ததோடு, நிகழ்வில் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய தொடரின் தயாரிப்பாளர் குஷ்மாவதி, “Eஅயலியை மாபெரும் வெற்றியடையச் செய்த பத்திரிகைகள் மற்றும் ஊடகத் துறையினர் அனைவருக்கும் நன்றி. ‘அயலி’ வெளியீட்டின் போது, ​​ஜீ5 இல் இது ஒரு முத்திரை பதிக்கும் தொடராக இருக்கும் என்று கூறியிருந்தோம். இன்று, அயலி அதை நிரூபித்ததைக் கண்டு நான் மகிழ்ச்சியும், பெருமையும்,  அடைகிறேன். இப்படி ஒரு படைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய ஜீ5 க்கு நன்றி. அருமையான தொடரை உருவாக்கிய இயக்குநர் முத்துக்குமாருக்கு நன்றி” என்றார்.

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அபி நக்ஷத்ரா பேசுகையில், ”என்னுடைய நடிப்பை ஏற்றுக் கொண்ட பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. என்னைத் தமிழ் செல்வி கதாபாத்திரமாக ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கும் இந்த செய்தியை மற்றவர்களிடமும் கொண்டு சேர்த்ததற்கும்  நன்றி. எனக்குப் பக்கபலமாக இருந்த இயக்குநர் முத்துக்குமார் சாருக்கும் மொத்த டெக்னிகல் குழுவிற்கும் எனது நன்றி” என்றார்.

 

நடிகர் சிங்கம்புலி பேசுகையில், “அயலியை ஊக்குவித்து அதை மக்களிடையே கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் பணி எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. பெண்களின் அதிகாரத்தை அவர்களது உரிமையையும் உரக்கச் சொல்லி இருக்கிறது இந்த அயலி. என்னையும் இந்த வெற்றி தொடரில் பங்களிக்க வாய்ப்பளித்த தயாரிப்புக் குழுவிற்கும் ஜீ5 தளத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் முத்துக்குமார் மற்றும் எழுத்தாளர் சச்சின் மற்றும் படக்குழுவினர் சரியான திட்டத்தை வகுத்து அதைச் சுமுகமாக நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளனர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.

 

இயக்குநர் முத்துக்குமார் பேசுகையில், “இந்த கதையை நம்பிய ஒட்டு மொத்த குழுவுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் முழு மனதோடு இதனை ஏற்றுக் கொண்ட பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் எனது நன்றிகள். இதில் நடித்துள்ள அத்தனை நடிகர்களுக்கும் நன்றி. இந்த படத்தில் சிறு சிறு காட்சிகளில் நடித்தாலும் முழு ஈடுபாட்டுடன் அர்ப்பணித்து நடித்தனர். தயாரிப்பாளரான Zee5 குழு இதனை முழுதாக நம்பியதால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது. இந்த தொடரில் வரும் சின்ன சின்ன விஷயங்களைக் கூட நுட்பமாகத் தேர்வு செய்து அதைப் பலரிடமும் கொண்டு சென்ற பத்திரிகை ஊடக நண்பர்களைப் பாராட்டி நன்றி கூறுகிறேன்” என்றார்.

 

ஜீ5 நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் கெளசிக் நரசிம்மன் பேசுகையில், “அயலி எங்களது தளத்தில் வெளியான மற்றுமொரு படைப்பல்ல, இது எங்கள் மனதிற்கு  நெருக்கமான மறக்க முடியாத படைப்பு. ஜீ5 லிருந்து நாங்கள் இந்த தொடரைச் செய்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறோம். ஒட்டு மொத்த அயலி குழுவிற்கும் எனது பாராட்டுகள்.” என்றார்.

 

ஜீ5 நிறுவனத்தின் அசல் உள்ளடக்கத்திற்கான இணை இயக்குநர் ஷியாம் திருமலை பேசுகையில், “அயலியை நாங்கள் எப்படித் தேர்வு செய்தோம் என்று பலர் எங்களிடம் கேட்கிறார்கள். இப்படி ஒரு அருமையான ப்ராஜெக்ட்டை மிஸ் செய்திருந்தால் நாங்கள் மிகவும் வருத்தப்பட்டிருப்போம்  என்று பதில் சொல்லிக்கொண்டே இருந்தேன். இதை நல்ல தொடரைப் பிரமாண்ட வெற்றியடையச் செய்த பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு எனது நன்றிகள்.” என்றார்.

 

Ayali

 

நடிகர் ‘அருவி’ மதன் பேசுகையில், ”எனது கதாபாத்திரம் பார்த்தவர்களின்  தந்தையின் சாயலைப் பிரதிபலிப்பதாகப் பலர் பாராட்டினார்கள் அது மிகப்பெரும்  மகிழ்ச்சியைத் தந்தது. அயலியை மாபெரும் வெற்றியடையச் செய்த பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி.  இந்தத் தொடரை மாற்றி, திரையரங்குகளில் பார்வையாளர்கள் பார்த்து மகிழும் வகையில் ஒரு திரைப்படமாக வெளியிடுமாறு ஜீ5 தளத்தைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

 

நடிகர் பிரகதீஸ்வரன் பேசுகையில், “"அயலி’ தொடரை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்த ஜீ5 தளத்தின் விவேக் சார், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் மணிகண்டன் சாருக்கு நன்றி. இந்தத் தொடரின் வெற்றிக்கு இந்த மூன்று நபர்களும் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்” என்றார்.

 

நடிகை லவ்லின் சந்திரசேகர் பேசுகையில், “’அயலி’ தொடரை  வெற்றிப்படைப்பாக மாற்றிய பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி. இத்தொடரைப் பார்த்தவர்கள் இதனுடன் நன்றாக ஒன்ற  முடிந்தது எனக்கூறினார்கள். அது மகிழ்ச்சியைத் தந்தது. இந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய முத்துக்குமார், சார், குஷ்மாவதி மேடம் மற்றும் ஜீ5 ஆகியோருக்கு நன்றி. இந்த படைப்பில்  நல்ல செய்தி உள்ளது. இப்படியான நல்ல  தொடரின் ஒரு பகுதியாக இருந்ததற்காக நான் பெருமையாக உணர்கிறேன்” என்றார்.

 

எழுத்தாளர் சச்சின் பேசுகையில், “ஓடிடி தளம் தமிழில் அறிமுகமாகும்போது மேம்போக்கான கேளிக்கை கொண்ட கதைகளைத் தேர்வு செய்தது, ஆனால் இப்போது அயலிக்குக் கிடைத்துள்ள வரவேற்பு புது பெஞ்ச்மார்க்கை உருவாக்கியுள்ளது, எமோஷன் கலந்த குடும்ப கதை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் சேர்ந்துள்ளது, அவர்களின் அன்றாட வாழ்வில் ஒப்பிடும் அளவிற்கு இது அமைந்துள்ளது, ஜீ5 நிறுவனத்தின் கௌசிக் சார், விவேக் சார், ஷாம் சார் மற்றும் தயாரிப்பாளர் குஷ்மாவதி அவர்களுக்கு நன்றி, மேலும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் ஒட்டு மொத்த குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தொடரைப் பற்றி நல்ல ரீவியூ எழுதிய பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

 

படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா பேசுகையில், “விலங்கு வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. விலங்கு மற்றும் அயலி போன்ற சிறப்பான படைப்புகளில் என்னையும் ஒரு பகுதியாக மாற்றியதற்காக ஜீ5 குழுவிற்கு நன்றி. இந்தத் தொடரிற்குக் கிடைத்த  வரவேற்பு பெரும்  மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அயலிக்கு ஒரு பெரிய ரீச் கிடைக்க உதவிய பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் மற்றும் இசையமைப்பாளர் ரேவா ஆகிய இருவரும் தான்  இந்த தொடரின்  வலுவான தூண்கள். இந்தத் தொடரில் பணியாற்ற  வாய்ப்பை வழங்கிய ஜீ5  இன் கௌசிக் சார் மற்றும் படக்குழுவிற்கும் நன்றி” என்றார்.

 

நடிகை காயத்ரி பேசுகையில், “அயலியை ஊக்குவித்து ஆதரித்த பத்திரிகை-ஊடக நண்பர்களுக்கு நன்றி. இந்தத் தொடரில் பணிபுரிவது படக்குழுவில் உள்ள அனைவருக்கும் முழு வாழ்நாள் திருப்தியைக் கொடுத்துள்ளது. இந்தத் தொடரை இவ்வளவு பரந்த அளவில்  பிரபலப்படுத்திய ஜீ5 க்கு நன்றி . முதல் நாள் படப்பிடிப்பிலிருந்து இந்தத் தொடரைப் பற்றி முழு குழுவினரும் பாஸிடிவாகவே உணர்ந்தோம், அது இப்போது மக்களிடத்திலும் பிரதிபலித்துள்ளது. உங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

 

நடிகர் லிங்கா பேசுகையில், “அயலியின் ஒவ்வொரு எபிசோடையும் பாராட்டுவதில் பத்திரிகைகளும், ஊடக நண்பர்களும் மகத்தான பணி செய்துள்ளனர். அயலிக்கு உங்களிடம் இருந்து கிடைத்த அன்பையும் மரியாதையும் கண்டு நான் வியப்படைகிறேன். மிக்க நன்றி. இந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்க இந்த வாய்ப்பை வழங்கிய எனது இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ZEE5 குழுவிற்கு நன்றி” என்றார்.

 

நடிகர் ஶ்ரீனிவாசன் பேசுகையில், ”இந்த தொடரில் பல முக்கியமான கதாபாத்திரங்களை உயிர்ப்புள்ளதாக இயக்குநர் முத்துக்குமார் உருவாக்கியுள்ளார். அது அயலியின் வெற்றிக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் இன்னும் பத்து வருடங்களுக்கு ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும். லவ்லின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் அனைத்து நடிகர்களும் சிறப்பாகப் பணி புரிந்துள்ளனர், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற அயலியை உருவாக்கிய Zee5 குழுவிற்கு நன்றி” என்றார்.

 

50 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, தற்போதும் முன்னிலையில் இருக்கும் ‘அயலி’ இணையத் தொடர் ஒடிடி உலகில் மேலும் சாதனைகளை நிகழ்த்துவதோடு, ஒடிடி உலகில் பல வித்தியாசமான தொடர்கள் வெளியாவதற்கான புதிய பாதையை அமைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8825

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery