கன்னட சினிமாவில் உருவாகும் திரைப்படங்கள் இந்திய அளவிலான படங்களாக உருவாவதோடு, இந்திய அளவில் கவனம் ஈர்க்கும் படங்களாகவும் உருவாகி வருகிறது. அந்த அகையில், கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் உபேந்திரா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது ‘கப்ஜா’. பல வெற்றி படங்களை இயக்கியிருக்கும் பிரபல கன்னட இயக்குநர் ஆர்.சந்துரு இயக்கியிருக்கும் இப்படத்தில் உபேந்திரா நாயகனாக நடிக்க, மற்றொரு கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் கிச்சா சுதீப் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். ஸ்ரேஷா சிறு இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.
எஸ்.எஸ்.இ மற்றும் இன்வெனியோ ஆர்ஜின் நிறுவனங்கள் சார்பில் இயக்குநர் ஆர்.சந்துரு தயாரிக்க, அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பை கவனிக்கிறார். ஏ.ஜே.ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் உருவாகியுள்ள ‘கப்ஜா’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் தமிழ் பதிப்பின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் ஆர்.சந்துரு, நடிகை ஸ்ரேயா, இணை தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இணை தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன், “நாங்க பெரிய பெரிய படங்களை தான் தயாரித்து வருகிறோம். அந்த வகையில், கப்ஜா படமும் மிகப்பெரிய படமாக உருவாகியுள்ளது. இந்த படம் தயாரிப்பில் இருக்கும் போது இயக்குநர் சந்துரு என்னை அணுகினார், அப்போது அவர் படத்திற்கான செட் உள்ளிட்ட அனைத்தையும் தயார் செய்து வைத்திருந்தார், அதையெல்லாம் பார்த்து நான் மிரண்டு விட்டேன். இவ்வளவு பெரிய படமாக உருவாகிறதே என்று ஆச்சரியப்பட்டு தான் சந்துருவுடன் இணைந்தேன்.
’கப்ஜா’ படத்தின் டிரைலரை பார்த்து சிலர் கே.ஜி.எப் படத்துடன் ஒப்பிடுவார்கள், நான் படத்தை பார்த்துவிட்டேன், இங்கு இதை நான் சொல்வது அதிகாக உங்களுக்கு தெரியும் ஆனால் அது தான் உண்மை. ‘கே.ஜி.எப்’ படத்தை விட ‘கப்ஜா’ மிகப்பெரிய படமாகவும், மிரட்டலாகவும் இருக்கும். நிச்சயம் இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.
இயக்குநர் ஆர்.சந்துரு பேசுகையில், “தமிழகத்தில் டிரைலரையும், திரிஷாவின் நடராஜா பாடலையும் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஸ்ரேயாவின் பாடலை முதல் முறையாக சென்னையில் தான் வெளியிடுகிறோம். அதற்கு காரணம், இந்தியாவிலேயே தமிழகத்தின் கலாச்சாரம் தான் சிறப்பானது. அதனால் தான் இந்த பாடலை இங்கு வெளியிட்டுள்ளோம். தமிழக மக்கள் நிச்சயம் எங்கள் படத்திற்கு ஆதரவை தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நான் கே.ஜி.எப் படத்தை பார்த்து விட்டு, இயக்குநர் பிரஷாந்த் இரண்டாவது படத்திலேயே இப்படி செய்துவிட்டாரே என்று ஆச்சரியப்பட்டு நாமும் பெரிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ‘கப்ஜா’ கதையை எழுதினேன். என்னுடைய பேவரைட் நடிகர் உபேந்திராவிடம் இந்த படத்தை சொன்ன போது, இவ்வளவு பெரிய படத்தை எப்படி எடுப்பது, என்று கேட்டார். நீங்கல் மட்டும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் போடும், நான் இந்த படத்தை எடுத்துவிடுவேன் என்று கூறினேன். அதன்படி அவர் எனக்கு ஒத்துழைத்தார், அதனால் தான் நானே இந்த படத்தை தயாரித்தேன். மிகப்பெரிய பட்ஜெட்டில், மிகப்பெரிய குழுவினரோடு படத்தை உருவாக்கியுள்ளோம். நான் பல படங்களை இயக்கியிருந்தாலும் இந்த படத்தை என் முதல் படமாக இயக்கியிருக்கிறேன். 3 வடங்களாக கடினமாக உழைத்திருக்கிறோம். நிச்சயம் தமிழ் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்து படத்தை வெற்றியடைய செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.
நடிகை ஸ்ரேயா பேசுகையில், “என்னைக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. தமிழ் சினிமா எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது, மறுபடியும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். கப்ஜா மிகப்பெரிய படமாக உருவாகியிருக்கிறது. நடராஜா பாடல் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த பாடலை என் மகள் ராதா பார்த்து, பாடலில் வருவது போல் மேலம் அடித்துக்கொண்டிருப்பார். இந்த பாடல் காட்சியை படமாக்கியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
கப்ஜா படத்திற்காக போடப்பட்ட செட் பிரமாண்டமாக இருந்ததோடு, மிகவும் தூசி நிறைந்ததாகவும் இருக்கும். அதில் நடிக்கும் போது எனக்கு சைனஸ் பிரச்சனை ஏற்பட்டது, அதையெல்லாம் தாங்கி தான் படத்தில் நடித்திருக்கிறேன், காரணம் மிக சிறப்பான கதை என்பதால் தான் நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம்.
இன்று படங்கள் அனைத்தும் இந்திய பான் இந்தியா அளவில் வெற்றி பெறுகிறது. இதன் மூலம் சினிமாவுக்கு மொழி முக்கியம் இல்லை என்பது தெரிகிறது. அனைத்து படங்களையும் அனைத்து தரப்பு மக்களும் பார்க்கிறார்கள். கப்ஜா படமும் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.
நான் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு என் குடும்பம் பெரும் ஒத்துழைப்பாக இருக்கிறது. நான் தொடர்ந்து நடித்துக்கொண்டிருப்பேன், எப்போதும் எனக்கு நீங்கள் ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள், அதுபோல் கப்ஜா படத்திற்கும் நீங்கள் ஆதரவு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது, நன்றி” என்றார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...