‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு பான் இந்தியா நடிகராக உயர்ந்திருக்கும் பிரபாஸ், தற்போது ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ப்ராஜெக்ட் கே’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களில் படப்பிடிப்பில் பிரபாஸ் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, இடையே அவருடைய திருமணம் பற்றிய தகவல் ஒன்றி வெளியாகி தீயாக பரவ, பிறகு எது வெறும் வதந்தி என்று பிரபாஸ் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், நடிகர் பிரபாஸின் விருந்தோம்பல் குறித்து நடிகை தமன்னா பேட்டி ஒன்றில் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பிரபாஸ் குறித்து பேசிய நடிகை தமன்னா அவருடைய விருந்தோம்பல் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக கூறினார்.
அதாவது, பிரபாஸின் விருந்தோம்பல் என்பது உலகளவில் தனித்துவமானது, விஷேசமானது மட்டும் இன்றி எதனுடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு மிக பிரமாண்டமானதாக இருக்கும், என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 30-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை மிக நேர்த்தியாக அலங்கரித்து விருந்தாளிகளை வியப்பில் ஆழ்த்தும் பிரபாஸ், விருந்தினர்கள் மீது வைத்திருக்கும் அதீத அன்பை அவரது உணவு மேஜை வெளிப்படுத்தும். எளிமையான உதாரணத்துடன் சொல்ல வேண்டும் என்றால், நாட்டை ஆளும் மகாராஜாவிற்கு இணையானவராக பிரபாஸை சொல்லலாம். அவரின் விருந்தோம்பல், மற்றவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அவருடன் பணியாற்றும் சக நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவர் மீதும் அவர் காட்டும் அக்கறையுடன் கூடிய அரவணைப்பு அலாதியானது. அவரது இந்த விருந்தோம்பல் பண்பு அவருடன் பணியாற்றும் சூழலை எப்போதும் இதமாக வைத்திருக்கும், என்றும் தமன்னா தெரிவித்துள்ளார்.
பிரபாஸின் விருந்தோம்பல் பற்றி நடிகை தமன்னா மட்டும் அல்ல, நடிகைகள் பூஜா ஹெக்டே, ஸ்ரத்தா கபூர், ஸ்ருதிஹாசன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் என ஏராளமான முன்னணி நட்சத்திரங்களும் பிரபாஸின் மாயாஜால விருந்தோம்பலில் கலந்துக்கொண்டு வியப்படைந்திருப்பதோடு, அவரைப் பற்றி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...