தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான மயில்சாமி இன்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 57.
1984 ஆம் ஆண்டு முதல் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த மயில்சாமி, படிபடியாக உயர்ந்து முன்னணி நகைச்சுவை இடத்தை பிடித்தார். விவேக் மற்றும் வடிவேலு உடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர், நடிகராக மட்டும் இன்றி பின்னணி குரல் கலைஞராகவும் பயணித்து வந்தார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு நெஞ்சுவலி காரணமாக சுயநினைவின்றி இருந்த மயில்சாமியை, குடும்பத்தார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது மயில்சாமியின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான திரை பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...