ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிகராக மட்டும் இன்றி கதையாசிரியராகவும், இயக்குநராகவும் தனி முத்திரை பதித்திருக்கிறார். அதிலும், அவருடைய படங்களில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகளுக்கு தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் வட்டம் இருக்கும் நிலையில், தற்போது அர்ஜூன் கதையில், கன்னட சினிமாவின் ஆக்ஷன் பிரின்ஸ் நடிகர் துருவா சர்ஜாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்டின்’ படத்தின் மாஸான டீசர் வெளியாகி இந்திய அளவில் வைரலாகியுள்ளது.
வாசவி எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உதய் கே.மேத்தா தயாரிப்பில், இயக்குநர் ஏ.பி.அர்ஜுன் இயக்கத்தில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘மார்டின்’ திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாகியிருப்பதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘மார்டின்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிப்ரவரி 23 ஆம் தேதி மாலை பெங்களூர் ஓரியன் மாலில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மும்பை ஆகிய பகுதிகளில் இருந்து நிருபர்கள் கலந்துக்கொண்டார்கள். மேலும், படத்தின் கதையாசிரியர் ஆக்ஷன் கிங் ஆர்ஜுன், தயாரிப்பாளர் உதய் கே.மேத்தா, இயக்குநர் ஏ.பி.அர்ஜுன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவின் சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், ஸ்டண்ட் இயக்குநர்கள் ராம் மற்றும் லக்ஷ்மன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் பேசுகையில், “இந்த படம் இவ்வளவு பெரியதாக வந்ததற்கு தயாரிப்பாளர் மேத்தா தான் காரணம். செலவு பற்றி அவர் எதுவும் யோசிக்கவில்லை, படம் பிரமாண்டமாக இருக்க வேண்டும், எதை செய்தாலும் சிறப்பாக செய்யுங்கள் என்று கூறினார். இந்த கதையை நான் துருவா சர்ஜாவுக்காக தான் எழுதினேன். இந்த கதையை எழுதி அவரிடம் சொன்ன போது, அவர் சில மாற்றங்களை சொன்னார், அவை அனைத்தும் அவரது ரசிகர்களுக்காக தான் அவர் சொன்னார். என்னிடம் ஒவ்வொரு முறையும் கதை பற்றி பேசும் போது, “மாமா இதை இப்படி செய்யலாம், அப்படி செய்யலாம், என் ரசிகர்கள் இன்னும் எதிர்பார்ப்பார்கள்” என்று சொல்வார். அவரது ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான படத்தை கொடுக்க வேண்டும் என்பது தான் அவருடைய விருப்பம். நிச்சயம் துருவா சர்ஜா ரசிகர்களை மட்டும் அல்ல இந்திய அளவில் சினிமா ரசிகர்களை ‘மார்டின்’ முழுமையாக திருபதிப்படுத்தும்.
பான் இந்தியா படம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு படம் இந்திய அளவில் வெற்றி பெற்றால், அந்த படம் பான் இந்தியா படமாகிவிடும். அப்படி ஒரு படம் தான் ‘மார்டின்’. இந்த கதை இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு கதை, அதுமட்டும் அல்ல படத்தின் உருவாக்கிய விதம், ஆக்ஷன் காட்சிகள் என அனைத்துமே இந்திய அளவில் ரசிக்க கூடியவையாக இருப்பதால், நிச்சயம் இந்த படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.
நடிகர் துருவா சர்ஜா பேசுகையில், “மார்டின் இவ்வளவு பெரியதாக வருவதற்கு தயாரிப்பாளர் தான் காரணம். அவர் கொடுத்த ஊக்கத்தில் தான் பல பெரிய விஷயங்களை எங்களால் செய்ய முடிந்தது. இந்த படத்திற்காக நான் உடல் எடையை அதிகரித்திருக்கிறேன். காரணம், உங்கள் உருவத்தை பார்த்தால் பீஸ்ட் போல் இருக்க வேண்டும், என்று படம் தொடங்கும் போதே இயக்குநர் சொல்லிவிட்டார். அதற்காக தான் இப்படி ஒரு உருவத்திற்கு நான் மாறினேன். டீசரை பார்த்து நீங்கள் பாராட்டியது மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயம் மார்டின் அனைத்து மக்களுக்கும் பிடித்த படமாக மட்டும் இன்றி கன்னட சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் படமாகவும் இருக்கும்.” என்றார்.
டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட ‘மார்டின்’ டீசர் விருந்தினர்களை வெகுவாக கவர்ந்ததோடு, டீசரின் பிரமாண்டமும், ஆக்ஷன் காட்சிகளின் வடிவமைப்பும் வியக்கவும் வைத்தது. மேலும், டீசர் வெளியாகி ஒரு சில நிமிடங்களில் வைரலான நிலையில், தற்போது இந்திய அளவில் ‘மார்டின்’ டீசர் டிரெண்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...