இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கு சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கஸ்டடி’. இதில் நாயகனாக நாக சைதன்யா நடிக்கிறார். நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் சீனிவாச சித்தூரி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பின்னணி வேலைகளில் படக்குழுவின் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் நாக சைதன்யா, தயாரிப்பாளர் சீனிவாச சித்தூரி உள்ளிட்ட ‘கஸ்டடி’ படக்குழுவினர் இளையராஜாவை சந்தித்து ‘ராஜா லைவ் இன் கான்செர்ட்’ நிகழ்ச்சிக்காக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இளையராஜாவின் இசை நிகழ்ச்சியான ‘ராஜா லைவ் இன் கான்செர்ட்’ ஐதரபாத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இளையராஜா ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள நிலையில், இசை நிகழ்ச்சிக்கு முன்னதாக ‘கஸ்டடி’ படக்குழு அவரை சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இளையராவுடன் நடந்த சந்திப்புக் குறித்து ஒரு ரசிகனாக நாக சைதன்யா கூறுகையில், ”மாஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தபோது என் முகத்தில் எவ்வளவு பெரிய புன்னகை. அவரது இசை என் வாழ்க்கையில் பல தருணங்களில் முக்கியமானதாக இருந்திருக்கிறது. அவரது இசை ரெஃபரன்ஸ் கொண்டு பல காட்சிகளையும், கதையையும் எனக்குள் நானே கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். இப்போது ‘கஸ்டடி’க்கு அவரே இசையமைத்து இருக்கிறார். உண்மையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் தான்” என்று தெரிவித்துள்ளார்.
அரவிந்த் சுவாமி வில்லனாக நடித்திருக்கும் ‘கஸ்டடி’ படத்தில் பிரியாமணி மிக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், ப்ரேமி விஷ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்த் இசையமைக்கும் இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்ய, டி.ஒய்.சத்யநாராயணா கலையை நிர்மாணித்துள்ளார். அபூரி ரவி வசனம் எழுத, ஸ்டண்ட் சிவா, மகேஷ் மேத்யூ சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள ‘கஸ்டடி’ திரைப்படம் வரும் மே 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...