முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 70 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து கூறி வரும் நிலையில், திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முகத்திறன் கொண்ட தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், “தமிழக முதல்வர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று 70 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இந்த இனிய நாளில் அவருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியல் உலகில் பல சவால்களை எதிர்கொண்டு அவற்றை சாமர்த்தியமாக சமாளித்து தமிழ்நாட்டின் முதல்வர் இருக்கையில் உட்கார்ந்தாலும், சக மனிதராக, சாமனிய மக்களோடு கைகோர்த்து அயராத மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் தலைவர், தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்திடுவதற்கு அயராது உழைத்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கினால் நலிவடைந்த பலதுறைகள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பான திட்டங்களினால் மீண்டும் முன்னேற்ற பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது போல், தமிழ் திரையுலகமும் சிறப்பான பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது.
இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அரசியல் தலைவர்களுக்கு ஊக்கமளிக்கும் தலைவராக திகழும் எங்கள் திராவிட நாயகனே..., தமிழகத்தின் நம்பிக்கையே..., நீங்கள் வாழ்வின் அனைத்து வளமும், நலமும் பெற்று நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...