கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் பல செய்திகள் தீயாக பரவி வந்தது. அதில் ஒன்று லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் இருக்கும் புகைப்படங்கள். நடிகர் விஜயின் லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், லெஜண்ட் சரவணனும் காஷ்மிரில் இருக்க, அவரும் அந்த படத்தில் நடிக்கிறாரோ! என்று எதிர்பார்க்கப்பட்டு, அது பற்றிய கமெண்ட்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
இதற்கிடையே, சரவணன் தரப்பு விரைவில் அதிரடியான அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க, தீப்பொறியாக இருந்த தகவல் கொழுந்து விட்டு எரிய தொடங்கிவிட்டது. முதல் படத்தையே மிக பிரமாண்டமான முறையில் தயாரித்து வெளியிட்ட சரவணன், தனது அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், அந்த அறிவிப்பு குறித்து வெளியிட்ட சரவணன் தரப்பு, அவருடைய முதல் படமான ‘தி லெஜண்ட்’ திரைப்படம் முன்னணி ஒடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகப் போகிறது என்ற தகவல் தான் அது என்று கூறி, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது.
சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் பிரமாண்டாக தயாரித்து நாயகனாக நடித்த ‘தி லெஜண்ட்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலகம் முழுவதும் பிரமாண்டமான முறையில் வெளியானதோடு, கோலிவுட்டை வியக்க வைக்கும் விதத்தில் 1000 திரையரங்குகளுக்கு மேல் வெளியானது.
உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு நிகராக லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ திரைப்படம் வெளியானதை பார்த்து ஒட்டுமொத்த கோலிவுட்டே வியந்த நிலையில், தற்போது ‘தி லெஜண்ட்’ திரைப்படம் ஒடிடி உலகிலும் நுழைந்திருக்கிறது. ஆம், ‘தி லெஜண்ட்’ திரைப்படம் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான சில மணி நேரங்களில் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
பிரபல இயக்குநர் ஜெடி - ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைப்பில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க பிரமாண்டமாக வெளியான ‘தி லெஜண்ட்’ இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டிஸ்னி ஹாட்ஸ்டாலின் வெளியாகி லெஜண்ட் சரவணனின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...