‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’, ‘வனம்’, ’ஜீவி 2’ என தொடர்ந்து கவனம் ஈர்க்கும் திரைப்படங்களில் நடித்து வரும் வெற்றியின் அடுத்த வெளியீடாக உருவாகியுள்ள படம் ‘மெமரீஸ்’. புதுமையான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் சைக்கோ திரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தில் வெற்றிக்கு ஜோடியாக பார்வதி அருண் நடிக்க, முக்கிய வேடம் ஒன்றில் ரமேஷ் திலக் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஹரிஷ் பெராடி, ஆர்.என்.ஆர்.மனோகர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இணைந்து இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அஜயன் பாலா வசனம் எழுதி, விபின் கிருஷ்ணா திரைக்கதையில் பணியாற்றியுள்ளார். கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அர்மோ மற்றும் கிரண் நூபிதாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
ஷிஜு தமீன்ஸ் பிலிம் ஃபேக்டரி பிரைவேட் லிமிடேட் சார்பில் ஷிஜு தமீன்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் வரும் மார்ச் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படக்குழுவினர் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் படம் குறித்து பேசிய நாயகன் வெற்றி, ”“எட்டு தோட்டாக்கள் முடிந்த உடனே இந்த கதையை என்னிடம் சொன்னார்கள். 2 வருடத்தில் பேசிக்கொண்டே இருந்தோம். அந்த நேரத்தில் வேறு ஹீரோவை வைத்துப் பண்ணுங்கள் என்று சொன்னேன் ஆனால் நான் தான் வேண்டும் என வெயிட் பண்ணி இந்தப்படம் எடுத்துள்ளார்கள். என்னை நம்பியதற்காக இயக்குநர்களுக்கு நன்றி. முழுக்க அடர்ந்த காட்டுக்குள், கஷ்டப்பட்டு படம்பிடித்துள்ளோம். எனக்கு இதில் 4 தோற்றங்கள். படம் நன்றாக வந்துள்ளது பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.
நாயகி பார்வதி அருண் பேசுகையில், “இது தான் எனது முதல் தமிழ்ப்படம் ஆனால் காரி முதலில் வெளியாகிவிட்டது. படப்பிடிப்பு எல்லாமே காட்டில் தான் நடந்தது. என்னுடைய கேரக்டர் ரொம்ப சின்னது தான் ஆனால் உங்களுக்குப் பிடிக்கும். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.” என்றார்.
இயக்குநர் ப்ரவீன் பேசுகையில், “மெமரீஸ் வைத்து இதுவரை நிறையப் படங்கள் வந்துள்ளது. ஆனால் இதில் நீங்கள் படம் பார்க்கும் போது நீங்களே அந்த பாத்திரமாக மாறிவிடுவீர்கள் அப்படி மாறி பார்க்கும் போது படம் எளிதாகப் புரியும். இந்தப்படம் உங்களுக்கு நிறைய ஆச்சரியம் தரும்.” என்றார்.
இயக்குநர் ஷியாம் பேசுகையில், “நான் மலையாளி, தமிழில் படம் செய்துள்ளேன். இக்கதைக்காகக் கேரளாவில் தயாரிப்பாளர் தேடின போது யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி நாயகனாக நடிக்கிறார் என்று கூறியபோது ஷிஜு சார் ஜீவி படம் பார்த்து உடனே படம் செய்யலாம் என ஒத்துக்கொண்டார். வெற்றி இப்படத்தில் 4 தோற்றங்களில் வருவார். இப்படம் மிக சிக்கலான சைக்கலாஜிக்கல் திரில்லர். படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். உங்கள் ஆதரவைப் படத்திற்குத் தாருங்கள் நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் ஷிஜுதமீன்ஸ் பேசுகையில், “இளைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் "மெமரீஸ்". இது எனது முதல் படம். எங்கள் படம் வெற்றி பெற உங்கள் ஆதரவு தேவை நன்றி.” என்றார்.
இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் பேசுகையில், “இப்படம் எனது இரண்டாவது படம். க் எனது முதல் படம். இப்படம் சீட் எட்ஜ் திரில்லர். நாங்கள் எல்லோரும் புதியவர்கள், மக்களிடம் நீங்கள் தான் கொண்டு செல்ல வேண்டும். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.
ஒளிப்பதிவாளர் கிரண் நுபிதால் பேசுகையில், “தமிழில் எனக்கு இது முதல் படம் மிகச் சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் தான் நான் இணைந்தேன் என் வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளதாக நம்புகிறேன் நன்றி.” என்றார்.
எழுத்தாளர் விபின் கிருஷ்ணா பேசுகையில், “இது எனது முதல் மேடை. இந்த மேடைக்காக எங்கள் டீம் பல நாள் காத்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு வந்த பல தடைகளைத் தாண்டி இப்படம் முடிய எங்கள் தயாரிப்பாளர் ஷிஜு தமீன் தான் காரணம். அவருக்கு நன்றி. வெற்றி தேர்ந்தெடுத்த எந்த கதையும் சோடை போகாது. இப்படத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு அவருக்கு நன்றி. ஷ்யாம் பல கால நண்பர் பல வருடங்களாக இணைந்து வேலை பார்த்து வருகிறோம். அஜயன் பாலா சார் தமிழில் வசனங்களை அட்டகாசமாகச் செய்துள்ளார். மார்ச் 10 எல்லோரும் தியேட்டரில் இப்படத்தைப் பாருங்கள் நன்றி.” என்றார்.
வசனகர்த்தா அஜயன் பாலா பேசுகையில், “லாக்டவுன் முன்பாக இயக்குநர்கள் என்னைப் பார்க்க வந்தார்கள் அவர்கள் கதை சொன்ன போது நாம் கணிக்க முடியாத திருப்பங்கள் நிறைய இருந்தது. ப்ரவீன் ஷியாம் இருவரையும் கொஞ்சம் விட்டால் நம்மை குழப்பி விடுவார்கள். இது நான் லீனியரில் ஒரு மாறுபட்ட சைக்கோ திரில்லராக இருக்கும். வெற்றி திரை வாழ்வில் இது முக்கியமான படமாக இருக்கும். உங்களைப் பல இடங்களில் ஆச்சரியப்படுத்தும்.” என்றார்.
இந்த படத்திற்கு வெற்றியை ஹீரோவாக தேர்வு செய்தது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர்கள், “8 தோட்டாக்கள் படம் பார்த்த உடனே வெற்றியை எங்களுக்கு பிடித்துவிட்டது. அதுமட்டும் இன்றி வெற்றிக்கு 8 தோட்டா படத்திற்குப் பிறகு பெரிய ரசிகர் வட்டம் உருவாகிவிட்டது. தற்போது அவருக்கு கேரளாவில் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள், அதனால் தான் அவரை ஹீரோவாக வைத்து இந்த படத்தை எடுத்தோம். சொல்ல போனால் இந்த கதையை நாங்கள் வெற்றியை மனதில் வைத்து தான் எழுதினோம்.” என்றனர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...
‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘முரா’...
பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...