Latest News :

’அயலி’ தொடரைத் தயாரித்ததற்காக பெருமைப்படுகிறேன் - தயாரிப்பாளர் குஷ்மாவதி நெகிழ்ச்சி
Thursday March-09 2023

வெப் சீரிஸ் உலகில் புதிய பாதையை வகுத்ததோடு, திரையுலகினரையும் மக்களை வியக்க வைத்த ஒரு படைப்பாக வெளியாகி தற்போது வெற்றிகரமாக பெரும்பாலான மக்களின் ஃபேவரைட் இணையத் தொடராக இருக்கிறது ‘அயலி’. பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும், தற்போதைய காலக்கட்டத்திலும் சில பழைய பழக்க வழக்கங்களால் பெண்கள் எப்படி சிறைபடுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்த இத்தொடர் ஜீ5 தமிழில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

 

இந்த நிலையில், ‘அயலி’ தொடரின் வெற்றியை கொண்டாடும் விதமாக ‘அயலி’ குழுவினரின் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, சுசீந்திரன், பாண்டியராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு, ‘அயலி’ இணையத் தொடரில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கேடயங்கள் வழங்கினார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய ‘அயலி’ தொடரின் தயாரிப்பாளர் எஸ்.குஷ்மாவதி, “அயலி தொடரை தயாரிக்க தனக்கு வாய்ப்பளித்தற்கு Zee5 நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி. இந்தத் தொடரை எடுத்து இருக்கும்  இயக்குநர் இப்படியும் கதை சொல்லலாம் என்ற முத்திரையைப் பதிந்துவிட்டார்.  பெண்ணியம் சார்ந்த தொடரை ஒரு பெண்ணான நான் தயாரிக்க எனக்கு வாய்ப்பளித்தற்கு Zee5-க்கு நன்றி கூறுகிறேன்.

 

மேலும் அயலி போன்ற தொடரைத் தயாரித்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன். அயலி தொடரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த மீடியா மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும்  நன்றி சொல்ல வேண்டும். 199 0களில் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரத்தில் இருக்கும் வீரப்பண்ணை என்னும் கிராமத்தில் நிகழும் கதையே இந்த அயலி. இந்த கிராம மக்கள் பல நூறு ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கும் சம்பிரதாயங்களையும் கட்டுப்பாடுகளையும் கைவிடாமல் வாழ்கின்றனர். அங்கிருக்கும் பழமை வாதிகள் மக்களை வேறு எதையும் சிந்திக்க விடாமல் செய்கிறார்கள். 

 

பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் படிக்கக் கூடாது, கோயிலுக்குள் செல்லக் கூடாது, உடனே திருமணம் செய்ய வேண்டும் என்றெல்லாம் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். அதையும் மீறி 13 வயதுச் சிறுமி தமிழு (தமிழ்ச் செல்வி) படிக்க நினைக்கிறாள். தன்னைப் பற்றி மட்டும் யோசிக்காமல், தன் சக தோழிகளின் வாழ்க்கையிலும் ஒளியேற்ற ஆசைப்படும் தமிழின் கனவு என்ன ஆனது என்பதே கதை.

 

ஒரு சமூகம் என்பது அதில் உள்ள பெண்களைச் சார்ந்தது, அப்பெண்ணும் படித்தால் மட்டுமே அந்தச் சமூகம் வளரும் என்ற கருத்தை அழகாக, ஆணித்தரமாக, யாரையும் புண்படுத்தாமல் அனைவருக்கும் புரியுமாறு சொன்னதில் இயக்குநர் முத்துக்குமார் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

தொடரின் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்ககூடியதாக காட்சியமைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. அவர்களுக்குப் பாராட்டுக்களும் நன்றிகளும். இத்தொடரில் நடித்த அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், சிங்கம்புலி, TSR, லிங்கா, லவ்லின், காயத்திரி, தாரா மற்றும் இதில் நடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள். 

 

அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தை நேர்த்தியாக, எங்கும் மிகைப்படுத்தாமல், உணர்வு பூர்வமாக நடித்ததே இத்தொடரின் வெற்றிக்கு காரணம்” என்றார்.

 

Ayali Success Meet

 

நிகழ்ச்சியில் இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், “இந்த கூட்டு முயற்சியில் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றி இருந்தார்கள். இயக்குநரைப் பாராட்டினால் அனைவரையும் பாராட்டினது போலத்தான்.அனைவரையும் பாராட்டினால் இயக்குநரைப் பாராட்டியது போல்தான்.இதில் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் நடிகர்கள் என ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்.மற்ற படங்களில் காமெடியனாக நடித்தவர்களைக் கூட  இதில் கேரக்டர் ஆகப் பயன்படுத்தி யிருக்கின்றார்கள். 

பார்த்தவர்களுக்கு நல்ல அனுபவமாக இருந்தது.கேமராமேன், ஆர்ட் டைரக்டர், எடிட்டர் என எல்லாருமே  சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார்கள். 55 நாட்களில் இந்தத் தொடரை முடித்து இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு படத்துக்கான கால அளவு. இவ்வளவு விரைவாக முடித்தது சரியான திட்டமிடல் இருந்ததால்தான் சாத்தியப்பட்டிருக்க வேண்டும்.இதைப் பார்த்துவிட்டு என் உதவியாளர்களிடம் எல்லாம் நாம் பார்க்கச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பட குழுவில் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெளியிட்ட zee5 நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் பாரதிராஜா  பேசுகையில், “பூப்போல பொண்ணு பூப்படஞ்சா அவளைப் பூட்டுங்க வச்சி சாரைக்குள்ள” என்று  ஒரு பாட்டு இருக்கிறது. இந்த சின்ன விஷயத்தை பெரிதாக்கி கொண்டு சமைந்த பெண்களை நமது சமுதாயத்தில் வெளியே விடுவதில்லை. அதையெல்லாம் உடைக்க வேண்டும் என்று தான் நான் நிறைய படங்களில் என்னால் முடிந்ததைச் சொல்லி இருக்கிறேன். என்னுடைய படங்களில் பெண்கள் பூப்படைவதும் பூப்படைந்த பெண்கள் வெளியே வருவதையும் சொல்லி இருப்பேன். பல படங்களில் பெண்ணுரிமை பேச வைத்திருப்பேன். இந்தச் சிறப்பான தொடரை இயக்கிய இயக்குநர் முத்துக்குமாருக்கும் இந்தக் கதையை ஒப்புக்கொண்டு பெங்களூரில் இருந்து வந்து தயாரித்துள்ள தயாரிப்பாளர் குஷ்மாவதிக்கும் பணியாற்றிய கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் சுசீந்திரன் பேசத் தொடங்கும் முன், யாரையும் முகம் பார்க்காமல் பேசக்கூடாது என்றவர், முதலில் இந்தப் படக்குழுவினை பார்க்க விரும்புகிறேன் என்று கூறி அனைவரையும் அழைத்து ஒவ்வொருவருக்கும் கைகுலுக்கிப் பாராட்டி வாழ்த்தினார்.

 

தொடர்ந்து பேசிய சுசீந்திரன், “இது ஒரு ஆவணப்படம். இது கொஞ்சம் தவறி இருந்தாலும் முழு ஆவணப் படமாக மாறி இருக்கும்.அப்படி மாறி இருந்தால் எல்லாராலும் ரசிக்க முடியாது .ஆனால் இதை சுவாரஸ்யமாக அனைவரும் ரசிக்கும்படி ஒரு படைப்பாக உருவாக்கி வழங்கியிருந்தார் இயக்குநர். ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும் அடுத்தது பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

 

கதாநாயகியாக நடித்திருந்த நடிகை அபியை என் மகள் மாதிரி நினைத்துச் சொல்கிறேன். இந்த மேடையில்தான் நான் இதைச் சொல்ல வேண்டும். உனக்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும். மாநில விருது 100% கிடைக்கும்.அவ்வளவு அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

அபிக்கு 17 வயது தான் ஆகிறது .இந்தச் சின்ன வயதில் இவ்வளவு நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார். இது மாதிரி வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. ஆனால் அபி உன்னை யாரும் கமர்சியல் படங்களுக்குக் கதாநாயகியாக அழைக்க மாட்டார்கள்.

இதைவிட அடுத்த ஒரு படம் செய்ய வேண்டும் என்றால் இதைவிட சிறப்பான ஒரு படம் செய்ய வேண்டும், வெற்றி பெற வேண்டும். தொடர்ந்து வெற்றியைக் கொடுக்க வேண்டும். உனது பலமும் பலவீனமும் உனக்குத் தெரியும். நீயே அதை உடைத்து கடந்து வெளியே வர வேண்டும்.

 

அடுத்தடுத்த படங்கள், ஒவ்வொரு படமும் வெற்றியாகவே கொடுக்க வேண்டும் .ஒரு படி தவறிவிட்டாலும் பெரிய தோல்வி ஆகிவிடும்.உலகத்தில் ஜெயித்தவர்கள் அனைவரும் உயரம் குறைவானவர்கள்தான் இங்கே இருக்கும் பாரதிராஜா அவர்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

 

 இந்த அயலி தொடரை எடுத்திருக்கும் தயாரிப்பாளர் குஷ்மாவதியை நிச்சயமாகப் பாராட்ட வேண்டும்.இந்த மாதிரி ஒரு கதையைத் தயாரிக்க வேண்டும் என்று நினைப்பதற்கு சிந்தனை செய்வதற்கு தேர்ந்தெடுப்பதற்கே ஒரு ரசனை, தைரியம் வர வேண்டும். இதை ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்றெல்லாம் யோசிப்பார்கள். ஒரு தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் நல்ல புரிதல் வேண்டும்.நல்ல இணக்கம் வேண்டும். ஏனென்றால் நான் வெண்ணிலா கபடிக்குழு கதையை பலரிடம் கூறினேன். அப்படி நான்  கூறிய போது பிடிக்கவில்லை என்று யாரும் சொல்லவில்லை. யாருக்கும் புரியவில்லை.

 

வெண்ணிலா கபடி குழு தயாரிப்பாளர் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன். அதனால் அந்தக் கதை அவருக்குப் புரிந்தது ,அவர் தயாரித்தார். தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் உள்ள அந்த புரிதல் அந்த நல்லிணக்கம் சரியாக இருந்ததால் தான்  இணைந்து இப்படிப்பட்ட ஒரு படைப்பை உருவாக்கி இருக்கிறீர்கள். சினிமாவில் அந்த நல்லிணக்கம் மிக மிக முக்கியமானது.அது இந்த படைப்பைத் திரையில் பார்க்கும் போது தெரிகிறது.

 

தமிழில் வெப் சீரிஸ் வெற்றி பெற்றதில்லை என்று சொல்லலாம். ஜீ டிவியைப் பொறுத்தவரை அவர்களின் முதல் வெற்றி விலங்கு தொடர். அடுத்தது அயலி என்று சொல்லலாம்.

 

பாரதிராஜா அவர்களை வைத்துக் கொண்டு இதே மேடையில் சொல்கிறேன். மண்ணின் மைந்தர் என்றால் அவர்தான். அவருடைய வேர்கள் தான் நாம். அயலி இயக்குநர் முத்துக்குமார். அவர் மாதிரி வளர்ந்து பெரிய இயக்குநராக வர வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.

 

Ayali Success Party

 

இப்படி ஒரு கதை ரசனை உள்ள தயாரிப்பாளராக பலராலும் பாராட்டப்பட்டவராக தயாரிப்பாளர் எஸ்.குஷ்மாவதி தமிழ்த்திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார் எனலாம். அவரது 'எஸ்ட்ரெல்லாஸ் ஸ்டோரீஸ்'  நிறுவனத்தின் சார்பில் தரமான கதை உள்ள படைப்புகளை எதிர்பார்க்கலாம்.

Related News

8862

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery