Latest News :

‘கூழாங்கல்’ இயக்குநருடன் இணைந்த சிவகார்த்திகேயன்!
Saturday March-11 2023

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில்,‘கூழாங்கல்’ திரைப்படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் பி.எல்.வினோத்ராஜ் உடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.

 

இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கும் புதிய படத்தை நடிகர் சிவகார்த்திகேயன், தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். ‘கொட்டுக்காளி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நாயகனாக சூரி, அன்னா பென் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

 

இப்படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகையில், “ஒரு படைப்பாளி தன்னுடைய சொந்த மண்ணின் கூறுகளை அதன் தன்மை மாறாது படமாக்கித் தந்து அது சர்வதேச அளவுகளில் அங்கீகாரம் பெறுவது திரைப்படத்துறையின் விலைமதிப்பற்ற தருணம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் மதிப்புமிக்க 'டைகர் அவார்ட்' வென்று, 'கூழாங்கல்' திரைப்படத்தின் மூலம் நம் தமிழ்த் திரையுலகைப் பெருமைப்படுத்திய இயக்குநர் பி.எஸ் வினோத்ராஜ் ஒரு ஜெம் என்று சொல்வேன். எனது நெருங்கிய நண்பரான சூரியுடன் இந்தப் படத்தில் பணிபுரிவது எனக்கு உற்சாகமான விஷயம். மேலும், அன்னா பென் போன்ற திறமை மிக்க நடிகை எங்கள் படத்தில் இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.

 

இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் படம் குறித்து கூறுகையில், ​​“திரைப்படத்துறையில் அனுபவம் மிக்கவர்களுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சூரி மற்றும் அன்னா பென் போன்ற மிகவும் திறமையான நடிகர்களுடன் பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது.” என்றார்.

 

இணைத் தயாரிப்பாளர் கலை அரசு கூறுகையில், “'கூழாங்கல்' படத்தில் இயக்குநர் வினோத்ராஜின் பணி எங்களுக்குப் பிடித்திருந்தது. இப்போது, அவருடைய இயக்கத்தில் அடுத்தப் படத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும், சூரி மற்றும் அன்னா பென் போன்ற திறமையான கலைஞர்கள் இந்தப் படத்தில் இணைந்திருப்பது எங்களை உற்சாகப்படுத்துகிறது. SK புரொடக்ஷன்ஸ் எப்போதும் நல்லப் படங்களைக் கொடுக்கவே ஆர்வம் காட்டி வருகிறது.  அந்த ஆர்வத்திற்குத் தீனி போடும் வகையிலான நல்லதொரு திரைப்படமாக இது இருக்கும்.” என்றார்.

 

Kottukkaali

 

சக்தி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்கிறார். 

 

தற்போது படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ள படக்குழு படம் பற்றிய முழு விவரங்களை அறிவிக்க உள்ளது.

Related News

8867

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery