இதுவரை யாரும் எடுக்கப்படாத, முற்றிலும் வேறுபட்ட காதல் கதையாக உருவாகி வரும் ‘அபியும் அனுவும்’ பார்த்து பார்த்து கையாள வேண்டிய காதல் கதை, என்று இயக்குநர் பி.ஆர்.விஜயலட்சுமி கூறியுள்ளார்.
இப்படம் குறித்து மேலும் கூறிய இயக்குநர் பி.ஆர்.விஜயலட்சுமி, “இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் காதல் கதை பொதுவாக யாரும் கையாள யோசிக்கும், பார்த்து பார்த்து கையாள வேண்டிய கதையாகும். லத்தீன் அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த கதை பிண்ணப்பட்டது. வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் காதலர்கள் சந்திக்கும் சவால்கள், இந்த காலத்து காதலில் சமூக ஊடகங்களின் பங்கு ஆகிய விஷயங்களையும் இப்படத்தில் அழகாக சொல்லப்பட்டுள்ளது.
தனது வாழ்நாளில் மிக சிறந்த நடிப்பினை இந்த படத்தில் பியா பாஜ்பாய் தந்துள்ளார். படத்தின் முதல் பாதியிலும், இரண்டாம் பாதியிலும் வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.
சிலர் நினைப்பது போல் 'அபியும் அனுவும்' கதை புற்றுநோயை பற்றியதல்ல. இக்கதைக்கு புற்றுநோய்க்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தனக்கு தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் கதாநாயகன் டோ வினோ தாமஸ். இவர் போன்ற ஒரு திறமைசாலியை தமிழ் சினிமாவிற்கு 'அபியும் அனுவும் ' மூலம் அறிமுகம் செய்வதில் எனக்கு பெருமை.” என்றார்.
யூட்லே பிலிம்ஸ் (Yoodlee Films) தயாரிக்கும் இப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். சுஹாசினி, பிரபு, ரோகினி, மனோ பாலா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...
பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் ஆர்...