’வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சிலம்பரசன் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘பத்து தல’. இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி விரைவில் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து படமும் உலகம் முழுவதும் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், சிலம்பரசனின் 48 வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. நடிகர் கமல்ஹாசைன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்து பாராட்டு பெற்ற தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.
இப்படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், “தரமான படைப்புகளைத் தரவேண்டும் என்பது ராஜ்கமல் பிலிம்ஸின் லட்சியம். இது நாற்பதாண்டுகளாகத் தொடர்கிறது. எங்கள் நோக்கத்திற்கு ஏற்பட்ட படமாக இந்த படம் அமைந்துள்ளது. சிலம்பரசன் டி.ஆர், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
நடிகர் சிலம்பர்சன் இப்படம் குறித்து கூறுகையில், “பொறுமை என்பது முக்கியமான ஒரு குணம். நிறைய நம்பிக்கை தேவைப்பட்டது. ஆனால் காத்திருந்ததற்கான பலன் கிடைத்துவிட்டது. என்னுடைய தீவிரமான படைப்புப் பசிக்குச் சரியான தீனியாக இந்தத் திரைப்படம் அமையும்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தில், கமல் சாரின் தயாரிப்பில் நடிப்பது என்பது மிகப்பெரிய கெளரவம். இயக்குநர் தேசிங்கு பெரியசாமி மீதும் அவருடைய திரைக்கதை மீதும் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. என் நடிப்பு வாழ்க்கையில் இந்த படம் முக்கியமான மைல்கல்லாக இருக்கும்.” என்றார்.
இயக்குநர் தேசிங்கு பெரியசாமி கூறுகையில், “இந்தத் திரைப்படத்தில் பங்கேற்பதையும், இந்தத் தனித்துவமான கதையைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்ததையும் பெரிய கெளரவமாகக் கருதுகிறேன். உலகநாயகன் கமல் சாரின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவன தயாரிப்பில் இயக்குவதால், இந்தப் படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது.
திறமையின் உறைவிடமான சிலம்பரசன் சாருடன் இணைந்து பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது, அவர் என்னுடையை திரைக்கதையைக் கேட்டு அதில் நம்பிக்கை வைத்த நான் முதலாக மிகச் சிறந்த ஒத்துழைப்பைக் கொடுத்திருக்கிறார். இந்த வாய்ப்பு அமையக் காரணமாக இருந்த மகேந்திரன் சாருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘கே.எச் 234’, சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் உள்ளிட்ட பல படங்களை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...