தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றி திரைப்படமான ‘பொன்னியின் செல்வன் - பாகம் 1’ பல்வேறு விருதுகளை பெற்ற நிலையில், 16 வது ஆசிய திரைப்பட விழாவில் 6 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாளை (மார்ச் 12) ஹாங்காங்கில் நடைபெற உள்ள ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ‘பொன்னியின் செல்வன் - பாகம் 1’ படக்குழு ஹாங்காங் புறப்பட்டது.
லைக்கா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் சார்பாக ஜி்.கே.எம்.தமிழ் குமரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஹாங்காங் சென்றுள்ளனர். இவர்களுடன் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர்பிரசாத், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோரும் ஹாங்காங்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு என 6 விருதுகளுக்கு ‘பொன்னியின் செல்வன் - பாகம் 1’ பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...