பீமாஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மனோஜ்.எஸ் தயாரிப்பில், பாலாஜி இயக்கத்தில், பிரஜின் நாயகனாக நடித்திருக்கும் சஸ்பென் திரில்லர் படம் ‘D3’.
ஹன்சிகா நடிப்பில் உருவாகும் ‘மேன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் மணிகண்டன்.பி.கே இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்ற “மனம் ஒரு கொதிகலனா...?” என்ற பாடலுக்கு இசை அமைத்தவர். ஜெயசீலன் கலை இயக்குநராக பணியாற்ற, ராம்போ விமல் சண்டைப்பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், வரும் மார்ச் 17 ஆம் தேதி தமிழகம் முழுவதும் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இப்படம் குறித்து இயக்குநர் பாலாஜி கூறுகையில், “படத்தின் கதை என்னவென்றால் ,எந்த குற்றச் செயலைச் செய்பவனும் குற்றம் செய்த இடத்தில் ஏதாவது ஒரு தடயத்தை அவனை மீறி விட்டுச் செல்வான் என்பது பிரபஞ்ச உண்மை .அப்படி இந்தப் படத்தின் கதையில் குற்ற நிகழ்வு நடந்த இடத்தில் குற்றவாளி ஒருவன் ஒரு வார்த்தையை மட்டும் விட்டுச் செல்கிறான். அந்த வார்த்தைக்கான காரணத்தின் நுனி தேடி காவல்துறை மோப்பம் பிடித்துத் தொடர்ந்து குற்றத்தின் காலடித்தடயம் அறிந்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்து வழக்கை முடிப்பது தான் இந்தக் கதை. இப்படம் ஒரு தொடர் படைப்புரீதியில் உருவாக்கி உள்ளது. இதன் முந்தைய 2 பாகங்கள் விரைவில் வெளியாகும்.
D3 படப்பிடிப்பு பல்வேறு கட்ட சோதனைகளையும் தடைகளையும் தாண்டி நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பின் போது சண்டைக் காட்சிகள் தொடங்கிய அன்று நாயகன் பிரஜின் ஓட்டிய கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த படம் பெரும்பாலும் கோவிட் காலத்தில் படமாக்கப்பட்டது. அப்போது படக்குழுவைச் சேர்ந்த 10 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது. அதையும் தாண்டித்தான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.” என்றார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...