‘மதயானைக் கூட்டம்’ படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘இராவணக் கோட்டம’. சுமார் 4 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படம் சில பல பிரச்சனைகளை கடந்து தற்போது முழுவதுமாக நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகியிருக்கிறது. ஆனால், இந்த சமயத்திலும் அப்படம் சிக்கல் ஒன்றில் சிக்கி தவிப்பது தான் பெரும் சோகம்.
தற்போது வெளியீட்டுக்கு தயாராக இருந்தாலும் படத்தின் வெளியீட்டில் சில சிக்கல்கள் இருப்பதாக கோலிவுட்டில் சொல்லப்பட்டு வரும் நிலையில், படத்தின் விளம்பரத்திற்காக நிருபர்கள் சிலரை துபாய்க்கு அழைத்து செல்ல தயாரிப்பாளர் முடிவு செய்தாராம்.
இதையடுத்து இந்த பொறுப்பை பி.ஆர்.ஓ ஒருவரிடம் ஒப்படைக்க, அவரோ தனது குடும்பத்தை சேர்ந்தவர்களை நிருபர்கள் என்று சொல்லி ஒரு பட்டியலை கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் அறிந்த நிருபர்கள் பி.ஆர்.ஓ மீது கடுப்பானதோடு ‘இராவணக் கோட்டம்’ படத்தின் மீதும் கடுப்பாகி விட்டார்களாம். இதையடுத்து ‘இராவணக் கோட்டம்’ படத்திற்கு எதிராக நெகட்டிவ் தகவல்கள் வெளியாக தொடங்கியிருக்கிறது. குறிப்பாக இந்த படம் வெளியாகாது என்ற தகவல் பரவுவதோடு, படம் மற்றொரு படத்தின் காப்பி என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், நான்கு வருடங்களாக இந்த படத்திற்காக நடிகர் சாந்தனு பாக்யராஜும், இயக்குநர் விக்ரம் சுகுமாரனும் காத்திருக்கும் நிலையில், பி.ஆர்.ஓ செய்த உள்ளடி வேலையால் படத்திற்கு எதிராக நெகடிவ் தகவல்கள் பரவுவதை அறிந்து அப்செட்டாகியிருக்கிறார்களாம்.
ஏற்கனவே, விஜய் படம் ஒன்றுக்காக இணையதளங்களுக்கு வழங்கப்பட்ட விளம்பர பணத்தை இதே பி.ஆர்.ஓ, தன்வசப்படுத்திக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலை, தனுஷின் ‘வாத்தி’ பத்திரிகையாளர்கள் காட்சியில் தனது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு பின் இருக்கைகளை கொடுத்துவிட்டு, விமர்சனம் எழுதும் நிருபர்களுக்கு திரையின் அருகே இருக்கும் இருக்கைகளுக்கான டிக்கெட்டுகளை கொடுத்து கடுப்பேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...