இந்திய திரையுலகின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக பார்க்கப்பட்ட ‘பொன்னியின் செல்வன் - பாகம் 1’ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான சுபாஸ்கரன் தனது லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து தயாரித்த இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன் - பாகம் 2’ மீது இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, ‘பொன்னியின் செல்வன் - பாகம் 2’ வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தற்போது படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் லண்டனில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கார்த்தி நடித்திருக்கும் வந்தியத்தேவன் மற்றும் திரிஷா நடித்திருக்கும் குந்தவை கதாபாத்திரங்கள் இடம்பெறும் காதல் பாடலான “அக நக முகநகையே” என்ற பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வெளியாகி 24 மணி நேரத்திற்குள்ளாகவே பல மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கும் ‘“அக நக முகநகையே...” பாடலை பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் எழுத, சக்தி ஸ்ரீகோபாலன் பாடியிருக்கிறார்.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத் குமார், விக்ரம் பிரபு, சோபிதா துளிபாலா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரஹ்மான் என பல நட்சத்திர நடிகர்களைக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு
ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதி செய்ய, தோட்டா தரணி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...