Latest News :

’பாபா பிளாக்‌ ஷீப்’ அபிராமிக்கு திருப்புமுனை படமாக அமையும்! - இயக்குநர் நம்பிக்கை
Tuesday March-21 2023

பேச்சாளர், நடிகர், யூடியுப் பிரபலம் என பன்முக திறன் கொண்ட ராஜ்மோகன், ‘பாபா பிளாக் ஷீப்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கும் இப்படம் பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகிறது.

 

இப்படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பியிருக்கிறார் ‘விருமாண்டி’ புகழ் நடிகை அபிராமி. அவருடன், அயாஸ் நரேந்திர பிரசாத், அம்மு அபிராமி, விருமாண்டி அபிராமி, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், சுப்பு பஞ்சு, சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன், சேட்டை ஷெரீப், மதுரை முத்து, கேபிஒய் பழனி, ஓ.ஏ.கே.சுந்தர், நக்கலைட்ஸ் பிரசன்னா, நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

 

சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவுய் செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, யுகபாரதி, ஏ.ப.ராஜா, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, உறியடி விக்கி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். அஸார், லீலாவதி குமார் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார்.

 

பள்ளிக்குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள்,  துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு அழகான திரைக்கதையாக, உணரச்சிகரமான டிரமாவாக உருவாகும் ’பாபா பிளாக்‌ ஷீப்’ படத்தில் ஒரு அன்னையாக மிக முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை அபிராமி, ஒரு உணர்ச்சிகரமான காட்சியில் மொத்த படக்குழுவையும் தனது நடிப்பு மூலம் கண்கலங்க வைத்துள்ளார்.

 

Abirami and Rajkanth

 

இது குறித்து இயக்குநர் ராஜ்மோகன் கூறுகையில், “’பாபா பிளாக்‌ ஷீப்’ பள்ளிக்குழந்தைகளின் வாழ்வை சொல்லும் ஒரு அழகான டிரமா. இப்படத்தில் ஒரு குழந்தையை பிரசவம் முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் அன்னை கதாபாத்திரம்  இருந்தது.  இப்பாத்திரத்திற்காக  நடிகை அபிராமி அவர்களை அணுகினேன்,  கதையை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்து, நான் நடிக்கிறேன் என்றார். படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு அறிமுக நடிகை போல், என்னிடம் கருத்து கேட்டு, அவரது கதாப்பாத்திரத்தை அட்டகாசமாக திரையில் கொண்டு வந்துள்ளார். மிகவும் உணரச்சிகரமான ஒரு காட்சியில் அவரது நடிப்பை பார்த்து, மொத்த படக்குழுவும் கண்கலங்கி எழுந்து கை தட்டியது. அந்த காட்சியை ரசிகர்கள் திரையில் பார்க்கும் போது, கண்டிப்பாக அவர்களும் கண்கலங்குவார்கள்.  இப்படம் நடிகை அபிராமிக்கு  மீண்டும் திரையில் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம், படத்தில் மதுரை முத்து, RJ விக்னேஷ்காந்த், சுப்பு பஞ்சு,சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட் போன்ற பல முன்னணி நடிகர்கள் அட்டாகாசப்படுத்தியுள்ளார்கள்.  படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது விரைவில் டீசரோடு சந்திக்கிறேன்.” என்றார். 

Related News

8884

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery