Latest News :

விழுந்து விழுந்து சிரிப்பீங்க! - உத்தரவாதம் கொடுத்த ‘காசேதான் கடவுளடா’ படக்குழு
Wednesday March-22 2023

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘காசேதான் கடவுளடா’. இயக்குநர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில், எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம், 1972 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் பட மான ‘காசேதான் கடவுளடா’ படத்தின் ரீமேக் ஆகும்.

 

மிர்ச்சி சிவா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி, தலைவசால் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

வரும் மார்ச் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘காசேதான் கடவுளடா’ படத்தின் வெளியீட்டு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கே.ராஜன், படத்தை வெளியிடும் இ5 எண்டர்டெயின்மெண்ட் ஜெயகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

Kasethan Kadavulada

 

நிகழ்ச்சியில் இயக்குநர் ஆர்.கண்ணன் பேசுகையில், “நான் இயக்கிய ‘தி கிரேட் இந்திய கிச்சன்’ படம் கடந்த மாதம் வெளியான நிலையில், இந்த மாதம் காசேதான் கடவுளடா படம் வெளியாகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு படம் வெளியாவது என்பது தற்போதைய காலக்கட்டத்தில் சாதரணமான விஷயம் இல்லை என்றாலும், சரியான திட்டமிடலால் இது சாத்தியமாகியிருக்கிறது. இது தனி ஒரு மனித சாதனை அல்ல, ஒரு குழுவின் சாதனையாகத்தான் பார்க்கிறேன். இந்த படத்தின் என்னுடன் பயணித்த கலைஞர்களுக்கும், முதலீட்டாளர்கள், வெளியீட்டாளர்கள் என அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

சிவாவால் தான் இந்த படம் உருவானது. அவர் நடிகராவதற்கு முன்பாகவே எனக்கு பழக்கமானவர். அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் திட்டம். அது தள்ளிக்கொண்டே போன நிலையில், கொரோனா காலக்கட்டத்தில் தான் இந்த படத்தில் நாங்கள் சேர்வது என முடிவுவானது. அவர் இல்லை என்றால் இந்த படம் இல்லை. யோகி பாபுவின் தேதிகள் கிடைக்காமல் கஷ்ட்டப்படும் இந்த காலகட்டத்தில் இந்த படத்தில் அனைத்து காட்சிகளிலும் யோகி பாபு வருவது படத்தின் சிறப்பான விஷயமாகும். இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியீட்டாளர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள், அப்போது படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்தது.

 

இந்த படத்தை நான் தயாரித்த போது  எதிர்கொண்ட பிரச்சனைகளை பார்த்துவிட்டு, ”நீங்கள் இனி பட்ம் தயாரிக்க வேண்டாம், நாங்கள் தயாரிக்கும் படத்தை இயக்க மட்டும் செய்யுங்கள்” என்று என் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி, இனி நானும் அவர்கள் சொன்னது போல் தான் செய்ய போகிறேன்.” என்றார்.

 

Director Kannan

 

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “இது போன்ற நிகழ்ச்சிகளில் படத்தின் ஹீரோக்கள் கலந்துகொள்ள மாட்டார்கள், ஆனால் மிர்ச்சி சிவா இங்கு வந்திருக்கிறார். அதுமட்டும் அல்ல, பேனரில் முந்தைய காசேதான் கடவுளடா படத்தின் கலைஞர்கள் படத்தை போட்டிருக்கிறார்கள், சிவா படம் இல்லை. இது வேற ஒரு நடிகராக இருந்தால் இதற்கு கோவித்துக்கொண்டிருப்பார்கள், ஆனால் சிவ அப்படி செய்யாமல் இந்த நிகழ்ச்சிக்கு வந்து ஒத்துழைப்பு கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

 

இயக்குநர் கண்ணன் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். அந்த காலத்தில் ராமநாராயணன் தொடர்ந்து படங்கள் இயக்கி வெற்றி கண்டார். ஒரே சமயத்தில் மூன்று படங்களின் வேலைகளை அவர் செய்வார், அதற்கு காரணம் சரியான திட்டமிடல். அவரை போலவே கண்ணனும் சரியான திட்டமிடலும் நல்ல படங்களை கொடுத்து வருகிறார். அதே சமயம், தயாரிப்பு என்ற கடுமையான பணியையும் அவர் தொடர்ந்து செய்து வருகிறார். இந்த உலகத்தில் படம் தயாரிப்பது போல் பெரிய தண்டனை எதுவும் இல்லை. தயாரிப்பாளர் தனது பணத்தை முதலீடு செய்து அனைவருக்கும் வேலை கொடுப்பார், ஆனால் இறுதியில் அவர் ஒன்றுமில்லாமல் தலையில் துண்ட்டை போட்டுக்கொண்டு வீட்டுக்கு போவார். அப்படிப்பட்ட ஒரு பணியை கண்ணன் இனி செய்ய கூடாது, அவர் படங்களை இயக்க மட்டுமே செய்ய வேண்டும். 

 

இந்த படம் மிக சிறப்பாக வந்திக்கும் என்ற நம்பிக்கை இந்த மேடையை பார்த்த போது எனக்கு வந்துவிட்டது. பல வெற்றி படங்களை வெளியிட்ட வெளியீட்டாளர் மீனாட்சி சுந்தரம் இந்த படத்திற்கு திரையரங்கங்கள் போட்டுக்கொடுக்கிறார். ‘எல்.கே.ஜி’, ‘கோமாளி’ போன்ற படங்களுக்கு அவர் தான் திரையரங்கங்கள் போட்டுக்கொடுத்தார். அந்த படங்களை பார்த்தவுடனேயே மிகப்பெரிய வெற்றி பெறும், என்று கணித்தவர் அவர். அவர் இந்த படத்தையும் பார்த்து இது மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று முடிவு செய்து தான், படத்தின் வெளியிட்டு பணியை செய்து வருகிறார். அதனால், ‘காசேதான் கடவுளடா’ படம் தலைப்பை போலவே மிகப்பெரிய வெற்றி பெற்று பெரிய வசூலை பெறும். எனவே, கண்ணன் பெட்டியை திறந்து வைத்து உட்கார்ந்திருக்க வேண்டும், கடன் எதாவது இருந்தால் கூட அவர் அடைத்து விடலாம், அந்த அளவுக்கு பணம் கொட்டோ கொடு என்று கொட்டும்.” என்றார்.

 

K Rajan

 

படத்தின் நாயகன் மிர்ச்சி சிவா பேசுகையில், “இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும் ரொம்ப பிஸியாக இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், யார் வந்தாலும் வரவில்லை என்றாலும் பத்திரிகையாளர்களை பார்ப்பதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன். 

 

இந்த படத்தில் நடித்தது அல்ல அனுபவம். நானும் கண்ணனும் இணைந்து படம் பண்ண வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம் அது தற்போது நிறைவேறியுள்ளது. எல்லாம் படத்திலும் ஒப்பீடு இருக்கும். அதுபோல் இந்த படத்தையும் நிச்சயம் ஒப்பிடுவார்கள். ஆனால், நான் சொல்வது காசேதான் கடவுளடா படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற கிளாசிக் காமெடி படம். அதை விட மேலாக எங்களால் செய்ய முடியாது, எனவே அந்த படத்துடன் ஒப்பிடாமல் பார்த்தால் நிச்சயம் உங்களை படம் மகிழ்விக்கும். இந்த சமயத்தில் காசேதான் கடவுளடா படத்தில் நடித்த மூத்த கலைஞர்களிடன் ஆசியை பெற்றுக்கொள்கிறேன்.

 

ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தை இயக்குநர் கண்ணன் மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். அந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகளை தற்போது எடுப்பது கொஞ்சம் சவாலாக இருக்கும், தொழில்நுட்ப வளர்ச்சியால் அதை எப்படி செய்வார்? என்று யோசித்தேன். ஆனால், இயக்குநர் கண்ணன் மிக சிறப்பான திட்டத்தோடு காட்சிகளை படமாக்கினார். நிச்சயம் படம் உங்களை சிரிக்க வைக்கும்.” என்றார்.

 

Mirchi Siva

 

படத்தை வெளியிடும் ஜெயகிருஷ்ணன் பேசுகையில், “இந்த படத்தை வெளியிட வேண்டும் என்பதில் என் மனைவி ஆர்வமாக இருந்தார். கண்ணனின் தி கிரேட் இந்தியன் கிச்சம் படம் அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால் படம் பார்க்காமலேயே படத்தை வாங்க முடிவுவ் செய்து ஒப்பந்தம் போட்டு விட்டோம். அதன் பிறகு படத்தை பார்த்தேன், ஒரு குழந்தையிடும் கிலுகிலுப்பை காட்டினால் அது எப்படி சிரிக்குமோ அது போல் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் நாம் விழுந்து விழுந்து சிரிப்போம். நான் படம் பார்க்கும் போது அப்படித்தான் சிரித்தேன். 

 

இந்த வாரத்தில் வெளியாகும் படங்களில் ‘காசேதான் கடவுளடா’ தான் முக்கியமான படமாகவும், எதிர்பார்ப்பு மிக்க படமாகவும் உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாகிறது.” என்றார்.

 

Jayakrishnan

 

பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ராஜ் பிரதீப் இசையமைத்துள்ளார். முந்தைய காசேதான் கடவுளடா படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8885

’அமரன்’ படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Thursday October-31 2024

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...

பரபரப்பான சம்பவங்கள் பின்னணியில் உருவான ‘முரா’ பட டிரைலர் வெளியானது!
Thursday October-31 2024

‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் ‘முரா’...

ஃபேண்டஸி காதல் படமாக உருவாகியுள்ள ‘மெஸன்ஜர்’!
Wednesday October-30 2024

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...

Recent Gallery