’பொன்னியின் செல்வன் - பாகம் 2’ படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வரும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ‘லால் சலாம்’, ‘தலைவர் 170’ ஆகிய படங்களையும் தயாரித்து வரும் நிலையில், தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘தீராக் காதல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதையிஅ ஜி.ஆர்.சுரேந்தர்நாத்துடன் இணைந்து ரோகின் வெங்கடேசன் எழுதியிருக்கிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைத்திருக்கிறார். ராமு த்ஹங்கராஜ் கலை இயக்குநராக பணியாற்ற, பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு செய்திருக்கிறார். ஜி.ஆர்.சுரேந்தரநாத் வசனம் எழுதியுள்ளார். ரொமாண்டிக் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தை ஜி.கே.எம்.தமிழ்குமரன் தலைமை பொறுப்பினை ஏற்றிருக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் முடிவடைய உள்ள நிலையில் படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் என்பதால் ‘தீராக் காதல்’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...