Latest News :

பாடலாசிரியரான பிரபு தேவா
Friday July-28 2017

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன்  தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

 

அதை தொடர்ந்து  சந்தானம் நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “ படத்தையும்  தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது....இதை தொடர்ந்து பிரபுதேவா நாயகனாக நடிக்கும் ’எங் மங் சங்’ படத்தையும் தயாரிக்கிறார்கள். தேவி வெற்றிப் படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது. கதாநாயகியாக லஷ்மிமேனன் நடிக்கிறார்.

 

மற்றும் தங்கர்பச்சான், சித்ராலட்சுமணன், கே.ராஜன், R.j. பாலாஜி,பாகுபலி பிரபாகர் ( கலக்கேயா),  கும்கி அஸ்வின், மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   -   ஆர்.பி.குருதேவ்  ( இவர் காஞ்சனா 2, யோகி போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர். இசை    - அம்ரீஷ் , கலை   -  ராஜன்.D, தயாரிப்பு மேற்பார்வை - ஆர்.பி.பாலகோபி, தயாரிப்பு   -  கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  -   எம்.எஸ்.அர்ஜுன்.

இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை போன்ற படங்களில்  இணை இயக்குனராக பணியாற்றியவர்.

 

இந்த படத்தில் இடம் பெறும் பாடலான "அய்யனாரா வந்துட்டாங்க...இங்க பாரு...காவல் தெய்வமா...மூணு பேரு"இந்த பாடலை பிரபுதேவா முதன் முறையாக எழுதி இருக்கிறார்.

 

இந்த பாடல் அம்ரீஷ் இசையில் சங்கர்மகாதேவன் பாட சமீபத்தில் மும்பையில் பதிவு செய்யப்பட்டது. பாடலை பாடி முடித்த சங்கர்மகாதேவன் உடனடியாக பிரபுதேவாவுக்கு போன் செய்தார்.. சூப்பர் ஹிட்டாகக் கூடிய இந்த பாடலை நீங்க எழுதி இருக்கீங்கன்னு அம்ரீஷ் சொன்னார். இந்த பாட்டு நிச்சயம் எல்லா இடத்திலும் ஒலிக்கும். வாழ்த்துக்கள் என்று பிரபு தேவாவை வாழ்த்தியதோடு இல்லாமல் இசை அமைப்பாளர் அம்ரீஷையும் பாராட்டினார். முடிவடையும் கட்டத்தில் உள்ளது ’எங் மங் சங்’ படம்.

Related News

89

“தம்பி கலக்கிட்டான்” - கவுதம் கார்த்திக்கை மனம் திறந்து பாராட்டிய நடிகர் ஆர்யா
Sunday February-23 2025

லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்...

”சினிமாவில் தனிப்பட்டவர்களின் வெற்றி சாத்தியமில்லை” - பா.விஜய்
Sunday February-23 2025

பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட பா...

’நிறம் மாறும் உலகில்’ அம்மாக்களைப் பற்றிய தனித்துவமான படமாக இருக்கும் - இயக்குநர் பிரிட்டோ நெகிழ்ச்சி
Thursday February-20 2025

சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...

Recent Gallery