விஜயின் ‘மெர்சல்’ உலக அளவில் மிகப்பெரிய அளவில் ரிலிசிற்கு தயாராகி வரும் நிலையில் ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கமான தி கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கத்தில் வெளியாகி தனி பெருமையை பெற்றுள்ளது. ‘கபாலி’ மற்றும் ‘பாகுபலி’ படங்களுக்கு பிறகு தி கிராண்ட் ரெக்ஸ் தியேட்டரில் வெளியாகும் மூன்றாவது தமிழ்ப் படமாகும்.
இந்த நிலையில், தீபாவளிக்கு வெளியாகும் படத்திற்கு இப்போதே ரசிகர்கள் கட்-அவுட் மற்றும் பேனர்கள் கட்ட தொடங்கிவிட்டார்கள். இதனால், விஜய் ஏரியா ஒரே பண்டிகைமயமாக உள்ளது.
தமிழகத்தில் மட்டும் இன்றி, உலகில் எங்கெல்லாம் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்களோ, அங்கேல்லாம் விஜயின் கட்-அவுட் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த, இலங்கையில் 60 அடி உயர கட்-அவுட்டை வைத்து ரசிகர்கள் அசத்தியுள்ளார்கள்.
தீபாவளி வர இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், இலங்கை விஜய் ரசிகர்கள் இப்போதே மெர்சல் படத்தின் கட்-அவுட்டை வைத்து மொத்த இலங்கையையே மிரள வைத்துள்ளார்கள்.
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...
பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் ஆர்...