நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனான மணிகண்ட ராஜேஷ், சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார். இதையடுத்து சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் தற்போது இணையத் தொடர் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர்கள் பி.கே.விஜய் மற்றும் கிரிதர் ராமகணேஷ் இணைந்து இயக்கும் இந்த இணையத் தொடருக்கு ‘மை டியர் டயானா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மணிகண்ட ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடிக்கும் இதில், நடிகை மகாலட்சுமி, ஜனா குமார், மகேஷ் சுப்பிரமணியம், அக்சயா பிரேம்நாத், துரோஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
வாட்ஸ் பிரபு ஒளிப்பதிவு செய்யும் இந்த இணையத் தொடருக்கு குஹா கணேஷ் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை இளங்கோவன் மேற்கொண்டிருக்கிறார். ரொமான்டிக் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த இணையத் தொடரை வோர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்த இணையத் தொடரின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...