‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ என விஜய் சேதுபதியை வைத்து இரண்டு திரைப்படங்கள் இயக்கியிருக்கும் எம்.மணிகண்டன், தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் கைகோர்த்திருக்கிறார். ஆனால், இந்த முறை இவர்கள் கூட்டணி இணையத் தொடர் ஒன்றுக்காக இணைந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஒடிடி நிறுவனமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்திற்காக உருவாகும் இந்த இணையத் தொடரை 7C’s எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆறுமுக குமார் தயாரிக்கிறார். ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் குமார் படத்தின் எடிட்டராகவும், இம்மானுவேல் ஜாக்சன் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். வெப் சீரிஸின் ஒலி வடிவமைப்பை அஜயன் கே.அடாத் மற்றும் ஆடை வடிவமைப்பை கவிதா கையாள்கின்றனர்.
கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் சேதுபதி, தன் தனித்தன்மை வாய்ந்த நடிப்பின் வழியே, இந்தியா முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். இந்திய அளவில் புகழ்மிக்க நடிகராக விளங்கும் விஜய் சேதுபதி, ஏற்கனவே இந்தி மொழியில் உருவான இணையத் தொடரில் நடித்திருந்தாலும் தமிழில் அவர் நடிக்கும் முதல் இணையத் தொடர் இது தான்.
இந்த இணையத் தொடரின் படப்பிடிப்பு இன்று மதுரை அருகே உசிலம்பட்டியில் எளிமையான முறையில் பூஜையுடன் தொடங்கியது.
இந்த வெப் சீரிஸில் பங்குபெறவுள்ள மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...